பக்கம் எண் :

688

     இந்த தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதத்தில்
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தைத் தாள ஜதி சேர்ந்த இன்னிசையுடன்
இசைப்பது 12 வருடம் செய்த பூஜாபலனுக்கு உரியதாகும்.

8. தசாவதார ஸ்தோத்திரம்
 

     ராமாவதார ஸு ர்யஸ்ய சந்தர்ஸ்ய யதுநாயக
     ந்ருஸிம் ஹோ பூமிபுத்ரஸ்ய ஸெம்ய, ஸோம ஸிதஸ்யச
     வாமநோ விபுதேந்தரஸ்ய பார்கவோ பார்க்கவஸ்ய
     கூர்மோ பாஸ்கர புத்ரஸ்ய ஸைம்ஹிகேயஸ்ய ஸு கர
     கேதுர் ம்நாவாதாரஸ்ய யோகாசாந்யேபி கேசரா
                     - சுவாமி வேதாந்த தேசிகர்

     ஸ்ரீராமவதாரம்        - சூர்யன்
     ஸ்ரீகிருஷ்ணவதாரம்    - சந்திரன்
     ஸ்ரீநரசிம்மவதாரம்     - செவ்வாய்
     ஸ்ரீகல்கி அவதாரம்    - புதன் (சோமபுத்ரன், சந்திரனின் மகன்)
     ஸ்ரீவாமன அவராரம்   - வியாழன்
     ஸ்ரீபரசுராம அவதாரம் - சுக்கிரன்
     ஸ்ரீகூர்ம அவதாரம்    - சனி (பாஸ்கர புத்திரன்,
                           சூரியனின் மகன் சனி)
     ஸ்ரீவராஹ அவதாரம்   - இராகு
     ஸ்ரீமத்ஸ்ய அவதாரம்   - கேது
     ஸ்ரீபலராம அவதாரம்   - குளிகன் (சனியின் மகன்)

9. ஸ்ரீபவிஷ்ய புராணம்

     இது 18 புராணங்களில் 6 வது புராணமாகும். பவிஷ்யவெனில்
வரப்போவது எனப்பொருள். இதனை பவுடிய புராணம் என்றும் சொல்வர்.
இப்புராணம் பரமேஸ்வரன் பரந்தாமனுக்கு கூறியது. பரந்தாமன், நாரதனுக்கும்,
நாரதன் சுக்கிரனுக்கும், சுக்கிரன் பராசுரனுக்கும், பராசுரன் வியாசருக்கும்
உபதேசித்தது.

     கலியுகத்தில் தோன்றப் போகின்ற அரச வம்சம், கால நிலை, கல்கி
அவதாரம், போன்றவைகளுடன் புண்ணிய பாரத தேசத்தில் மட்டுமின்றி
அயல்நாட்டு ஆட்சியாளர்கள், அவர்களது மதம், பழக்க வழக்கம் பற்றியும்
இந்நூலில் வியத்தகு முறையில் விவரிக்கப்பட்டுள்ளது.