| ஆனி மாதத்தில் பாம்பு கர்ப்பந்தரிக்கும். கார்த்திகை மாதத்தில் 220 முட்டைகள் இடும். இதில் ஒன்றை மட்டும் வைத்துவிட்டு பிறவற்றை எல்லாம் உண்டு விடும். பாம்பை எவரும் கொல்லாதிருந்தால் 120 ஆண்டுகள் வாழும். இதுபோன்ற பல அரிய விஷயங்கள் இதில் உண்டு. 10. பதினெண் கலைகள் அனல் - மின்னல் தணல் - நெருப்பு நதி - நீர் தடாகம் - குளம் ஜாதகம் - கூடுவிட்டுக் கூடு பாய்தல் உஷ்ணம் - வெம்மை சீதளம் - குளிர்ச்சி புருஷோதகம் - வீரம் வாஸோதகம் - வ்யாக்யானம் ஸ்திரிபோதகம் - பெண்ணின் பருவம் பற்றிய விளக்கங்கள் அருணோதயம் - காலங்களறிதல் கிரஹோதயம் - கட்டிடக்கலை நவரோதம் - எண்வகை காலங்கள் அறிதல், நம் ஆயுள் காலத்தையும் ஒரு காலம் என அறிதல். பாத்ஸோதகம் - நகம், பாதம் போன்றவற்றால் செய்யக்கூடிய நல்ல மற்றும் தீய செயல்களைப் பற்றிச் சொல்லுதல். அஸ்ணோதயம் - அரசு நெறிமுறை, வழிகாட்டும் நெறிமுறைகள் மதுஸோதகம் - சோமபான், சுராபானம் போன்றவற்றால் உணவைக் கெடாது பாதுகாத்தல். பட்சோதகம் - உரையாற்றுதல் ஸ்நானோதகம் - தைலம், மூலிகைகளால் உடம்பை பேணுதல் இவைகளே பதினெட்டு கலைகளாகும். |