பக்கம் எண் :

690

11. ஸ்தாயி பாவம்

     கிருஷ்ண பக்தியில் 5 நிலைகள் உண்டு. இதற்கு ஸ்தாயி பாவம் என்று
பெயர்.

அ) சாந்தம்

     உலக பந்தங்கள் எல்லாவற்றினின்றும் விலகி இறைவனிடம் பற்றும்
பாசமும் நீங்காதவர்களாய் கிருஷ்ணனிடம் நம்பிக்கை வைத்து சதா
அவனையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள். இத்தகைய பக்தர்கட்கு
உதாரணம். கனகர், சனந்தனர்கள், நவயோகேந்திரர்கள். மற்றும் பலர்.

ஆ) தாஸ்யம்

     பகவானுக்கு அடிமை போல் பணி விடை செய்வது. உலகமெங்கும்
இதனை சர்வ சகஜமாக காணலாம். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் சித்ரகர்
பசிரகரி.

இ) சாக்கியம்

     கிருஷ்ணனை நண்பனாகக் கருதி பக்தி செலுத்துவது, (உ-ம்) குசேலர்,
பீமன், அர்ஜூனன், சகாதேவன்.

ஈ) வாத்ஸல்யம்

     ஸ்ரீகிருஷ்ணன் தெய்வீகக் குழந்தையாகக் கருதி அன்பு செலுத்தி பக்தி
செய்யும் பணிவிடை நிலை உ-ம் யசோதை.

உ) மாதுர்யம்

     ஒரு பெண் ஒரு ஆடவனைக் காதலிப்பது போல இறைவனைக் கருதி
அவனிடம் மாறாத காதல் கொள்ளும் பக்தி நிலை உ-ம். ஆண்டாள்,
கோபிகாஸ்திரிகள்.

12. ஆழ்வார்கள் அவதாரம் செய்த நதிகள்

     தாமிரபரணி - நம்மாழ்வார், மதுரகவிகள்
     வைகை     - பெரியாழ்வார், ஆண்டாள்
     பாலாறு     - பொய்கை, பேயாழ்வார்,
                  பூதத்தாழ்வார்.
     பேரியாறு   - திருமழிசை
     காவிரி      - தொண்டரடிப் பொடியாழ்வார்,
                  திருப்பானாழ்வார்,
                  திருமங்கையாழ்வார்.