பக்கம் எண் :

691

13. கீதாமந்திர்

     பகவத் கீதைக்கு பலமொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட வ்யாக்யானங்கள்
உள்ளன. இவைகளும், மூலமும் தொகுத்து ஒரு ஆலயத்தில் சேகரித்து
வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கீதா மந்திர் என்று பெயர். குருசேத்திரத்தில்
தான் இது அமைந்துள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள இவ்விடம்
டில்லியிலிருந்து 125 மைல் தூரமாகும்.

     ஹர்ஷப் பேரரசர் நிறுவிய ஸ்தானேசுவரா என்னும் பல்கலைக் கழகமும்
இங்குதான் உள்ளது. குருசேத்திரத்திலிருந்து 6 மைல் தொலைவில்
ஜோதீஸ்வரர் என்ற ஓர் இடம் இருக்கிறது. இங்குதான் பகவான் கிருஷ்ணன்
அர்ஜுனனுக்கு கீதை உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணர்,
பாண்டவர்கட்கு வண்ணத் திருவுருவங்கள் வைத்து பட்டு நகைகளால்
அலங்காரம் செய்யப்பட்டு சிறு கோவில்கள் இங்கே அமைந்திருக்கின்றன.

     இந்தப் பகுதியில்தான் யமுனை ஓடுகிறது. இங்குள்ள பல தீர்த்த
கட்டங்களில் புண்ணிய காலங்களில் நீராடுகின்றனர். பாரதப் போரில் பீஷ்மர்
கீழே விழுந்துவிட்ட பிறகு அம்புப்படுக்கையில் படுத்தபடி கண்ணனை
தியானம் செய்ததாக ஒரு வரலாறு உண்டு. அப்போது அவரது தாகத்தை
தவிர்க்க பார்த்தன் அம்பெய்து மண்ணில் சுனை நீரை உண்டாக்கி கொடுத்த
இடம் இங்குள்ளது. இவ்விடத்திற்கு பானகங்கை என்று பெயர். இவ்விடம்
தற்போது ஒரு சிறு குளமாக அமைக்கப்பட்டு போற்றப்பட்டு வருகிறது.
இங்குள்ள 3 மாடி கட்டிடம் ஒன்றுக்கு கீதா பவன் என்று பெயர்.

14. இராமானுஜரின் ஆலயச் சீர்திருத்தம்

     இன்று ஆலயச் சீர்திருத்தம் பற்றி பலர் மேடைகளில் பேசுகின்றனர்.
ஆனால் இவைகளையெல்லாம் சொல்லிலும் செயலிலும் காட்டியவர்
இராமானுஜர். தாழ்த்தப்பட்டவர்கட்கு சமத்துவம் தரவேண்டும் என்று இன்று
பேசுகிறார்கள். ஆனால் அன்றைக்கே இராமானுஜர் பிற்பட்டவர் என்று
சொல்லும் ஆதி திராவிடர்களை திருக்குலத்தார் என்று பெயரிட்டு
ஆலயப்பிரவேசம் செய்வித்து புரட்சி செய்தவர். இன்றைக்கும் திரு
நாராயணபுரத்தில் வருடத்தில் மூன்று நாட்கள் ஆதி திராவிடர்கள்
பெருமளவில் கோவிலின் கர்ப்பக் கிரஹத்திற்குள் நுழைந்து பெருமாளை
ஆலிங்கனம் செய்து வணங்கும் வழிபாடு நடைமுறையில் உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரிலும் ஆதி திராவிடர்கட்கு ஏற்றம் உண்டு. இங்கு நடைபெறும்
உற்சவத்தின் 7ஆம் திருநாளன்று ஆதி திராவிடர்கள் வந்து இறைவனை
வணங்கி