| தேர்வடம் தொட்டு இழுக்கின்றனர். இதற்குப் பின்னரே மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 15. வைகானஸம் ஒரு விளக்கம் வைகானஸ ஆகமம் ஸ்ரீமந் நாராயணனால் பிரம்மனுக்கு நேரில் உபதேசிக்கப்பட்டது. இவரைத்தான் ஸ்காந்தம் விகனஸர் என்றும். இவரே திருமாலின் திருமார்பினின்றும் தோன்றியவர். பத்மபூ பரமோதாதா தஸ்பிந் நாராயணா த்ரயம் என்பது ஸ்காந்தச் செய்யுள். இதன்படி வியாசன் மூலவேதங்களை 4 ஆகப் பிரிக்கும் முன்பே இந்த ஆகமம் உண்டாயிற்றென்பதாகும். விகனஸ முனிவரான பிரம்மன் ஒரு முனிவராகி, ஒரு முகத்துடன் நைமி சாரண்யம் என்ற புனித ஸ்தலத்தில் இந்த ஆகமம் பற்றிய புனித சிறப்பையும், மூல மந்திரம் என்னும் நாராயண மந்திரம் பற்றியும் தமது அணுக்கச் சீடர்கட்கு உபதேசித்தார். இந்த ஆகமம் முதன் முதலில் ஒன்றரைக் கோடி செய்யுட்கள் கொண்டதாக இருந்தது. பின்புதான் விகனஸ முனிவரின் சீடர்களால் 4 லட்சம் செய்யுள்களாக குறைக்கப்பட்டது. 16. அனந்தன் கைலாய மலை போன்ற வெளுத்த சரீரத்தோடும் 3 லட்சம் யோசனை நீளத்துடனும் ஆயிரம் தலைகளை உடைய ஸர்ப்பத்திற்கு அனந்தன் என்றும் ஆதிசேடன் என்றும் பெயர். தனது சரீரங்களில் விளங்கும் ரத்தினங்களுடைய காந்தியினால் இருளை விலக்கி 40 ஆயிரம் யோஜனை பருமனோடு விளங்கும் அனந்தனுக்கு ஆதாரமாக கூர்மம் உள்ளது. 17. அஷ்டநாகங்கள் மகாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்து அருள் பெற்ற அஷ்ட நாகங்கள் 1. சேஷன் 2. வாஸு கி 3. தகஷகன் 4. சங்கபாலன் 5. கார்க்கோடகன் 6. குளிகன் 7. பதுமன் 8. மகாபதுமன் 18. புருரவச் சக்கரவர்த்தியின் பூஜை:- இவனது மானசீக பூஜையைப் போல வேறு எவரும் செய்ய முடியாதென மகாவிஷ்ணுவே கூறியுள்ளார். இவனது மானசீக பூஜைக்கு இப்புவனங்களையெல்லாம் தாங்கி நிற்கும் ஆதி கூர்மமே பாத்திரங்கள் வைக்கும் மேடை அர்க்கிய பாத்தியாதிகளுக்குப் பாத்திரங்கள் ஆதிசேடனின் படமெடுத்த சிரங்களாகும். பசுவின் பால், சமுத்திரங்களாகும். நிவேதனம் |