| செய்யக்கூடிய அன்னங்கள். 14 லோகங்களும் அவைகளில் உள்ள பயிர்கள், மூலிகைகள் மற்றும் விருட்சங்களாகும். புஷ்பம் நட்சத்திரக்கூட்டங்களாகும். சந்தனம் - சந்திரன். ஆபரணங்கள் 12 ஆதித்தியர்கள். வஸ்திரம் - கிழக்கு முதலிய நான்கு திக்குகள். பாநீயம் என்ற அருந்தத்தக்க தீர்த்தம் - கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களாகும். தூபம் - மேகங்கள். தீபம் - சூரியன் போன்ற நவக்கிரகங்கள். பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம் போன்றவை மானஸரஸ் முதலிய புண்ணிய ஸரஸு கள். நிவேதனத்திற்கான அப்பங்கள் - மந்த்ரம் முதலான குல பர்வதங்களாகும். பானகத்திற்குச் சேர்க்கும் வெல்லக்கட்டிகள் - மலைகள். இவ்விதமான பூஜாதிரவியங்களாகக் கொண்டு மனத்தாலேயே பகவானுக்கு பிரதி தினம் ஆராதனம் செய்துவந்தான் புருரவச் சக்கரவர்த்தி. 19. விராட் புருஷ ரூபம் நேத்திரத்திலிருந்து சூரியனும், மனதிலிருந்து சந்திரனும் முகத்திலிருந்து இந்திரனும் அக்கினியும் உண்டாக, முடிகளாயிரமும், கண்களாயிரமும், தோள்களாயிரமும், தாள்களாயிரமும், பேர்களாயிரமும் விராட் புருஷ ரூபமாகும். 20. நாவலந்தீவு என்னும் பரத கண்டம் அங்கம், வங்கம், குலிங்கம், காம்போஜம், ஆந்திரம், புளிந்தம், கூர்ஜரம், மச்சம், காஷ்மீரம், மாளவம், சிங்களம், சோனம் சீனம், பாஞ்சாலம், சேதி, அவந்தி, கொல்லம், கொங்கணம், நேபாளம், பாண்டி மாளவம், சூரசேனம், சோனகம், கேரளம், நிடதம், கோசலம், குரு, மராடம் கன்னடம், கபாடம், காசளம், குந்தளம், கிராடம், குடகம், கருசம், ஒட்டியம், பப்பரம், பல்லவம், சவ்வீரம், திராவிடம், துளுவம், விதர்ப்பம். இவைகளே பிர்ம்மாண்ட புராணங்கூறும். பரத கண்டத்தில் இருந்த பண்டை நாடுகளாகும். 21. அஞ்சுகுடி அஞ்சு குடிக்கொரு சந்நதியாய் ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்ப் - பிஞ்சாயப் பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து.
| எம்பெருமானுக்கு என்ன தீங்கு நேருகிறதோ என்று அன்பினால் அஞ்சுகின்ற குடிகளாகிய ஆழ்வார்கள் பதின்மருக்கும் உரிய ஒரே புதல்வியாகத் தோன்றியதனால் ஆண்டாள் அஞ்சு |