பக்கம் எண் :

694

குடிக்கொரு சன்னதி என்று சிறப்பித்துக் குறிக்கப்பெற்றாள். இனி அஞ்சுகுடி
என்பது பெரியாழ்வாருக்குச் சிறப்புப் பெயரும் ஆகும். இங்ஙனமின்றி
திருமழிசையாழ்வார் நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், என்னும்
நான்கு குடிகளுடன் முதலாழ்வார்கள் ஆகிய ஒரு குடியும் சேர்ந்து அஞ்சுகுடி
(ஐந்து குடி) என்று பொருள் கொள்தலும் உண்டு.

22. வைகுண்ட ஏகாதசி பற்றிய ஒரு குறிப்பு

     திருப்பாற்கடலைக் கடையும்போது வைகுண்ட ஏகாதசியன்று விஷம்
தோன்றியது. மறுநாள் துவாதசியன்று அமிர்தம் தோன்றியது. துவாதசி அன்று
பக்தர்கள் அகத்திக் கீரை செய்து சாப்பிடுவார்கள். அகத்திக் கீரைக்கு
அமிர்தபிந்து என்ற ஒரு பெயர் உண்டு. அமிர்தபிந்து என்றால் அமிர்தத்துளி
என்று பொருள். இதை அகத்திய முனிவன் மூலிகை என்றும் கூறுவர்.
அகத்தியை துவாதசியன்று சாப்பிடுதல் திருப்பாற்கடல் அமுதத்தை (விஷ்ணு
தேவர்கட்கு கொடுத்தது போல்) சாப்பிட்டதற்கு ஒப்பாகும்.

23. இராமானுஜன்

     அனுஜன் என்றால் தம்பி என்று பொருள். ஆகவே இராமானுஜன்
என்றால் ராமனின் தம்பி என்று பொருள். இராமனின் தம்பி இலக்குவன்.
ஆதிசேடன்தான் இலக்குவன். அதே ஆதிசேடன்தான் இராமானுஜராக
வந்தான். இராமானுஜன் சன்னதி எங்கெங்கு இருக்கிறதோ அவ்விடத்தில் ஒரு
இராம விக்கிரகம் மாடத்திலாவது இருக்கும். இந்த விஷயம் பலபேருக்கு
தெரியாதபடியால் ராமானுஜன் சன்னதியில் இராமானுஜனை மட்டும் சேவித்து
விட்டுத் திரும்புவர்.

     இராமானுஜனுக்கு 5 ஆச்சார்யார்கள்.

     1. பெரிய நம்பி.
     2. பெரிய திருமலை நம்பி.
     3. திருவரங்கப் பெருமாளாரரையர்
     4. திருமாலையாண்டான்
     5. திருக்கோட்டியூர் நம்பி.

24. யதிராஜ ஸ்தோத்திரம்
 

     காஷாயாம்பர கவிசத சாத்ரம்
          கவிதக மண்டலு தண்ட பவித்ரம்
     வித்ரு தசிகா ஹரினாஜன சூத்ரம்
          வ்யாக்யதா த்வைபாயன சூத்ரம் - (பஜ யதி ராஜம்)