பக்கம் எண் :

695

     காஷாய வஸ்திரத்தினால் சாத்திக் கொள்ளப்பட்ட திருமேனியை
உடையவரும். கமண்டலத்தையும் திரி தண்டத்தையும், திரி தண்டத்துக்கு
மேல் பாகத்தில் உள்ள வஸ்திர விசேஷத்தை உடையவரும், சிவிகையை
உடையவரும், மான் தோல் முகம் கொண்ட யஞ்ஞோப வீதத்தை உடையவரும்
த்வைபாயனர் என்று சொல்லும்பாடியான வ்யாசர் அருளிய பிரம்ம
சூத்திரங்கட்கு வ்யாக்யானம் செய்தவரான எதிராஜரை ஜெபியுங்கள் என்று
வடுக நம்பிகள் வம்சத்தவரானவரும், மிதுனகால இராமவாசியான
ரங்காச்சாரியார் தாம் அருளிச்செய்த பஜயதிராஜ ஸ்தோத்திரத்தில்
சொல்கிறார்.

24. பிள்ளைப் பெருமாளையங்கார்.

     இவர் அஷ்ட பிரபந்தம் இயற்றினார். அஷ்ட பிரபந்தம் படித்தவன்
அரைப்புலவன் என்பது பழமொழி. இவர் ரெங்கனாதருக்கே தொண்டனாகி
அவனின்றி வேறு தெய்வமில்லையென்று பிற தெய்வத்தைத் தொழாது
மறந்தும் புறந்தொழாராயிருந்தார். அவர் அரங்கநாதனைப் பற்றி மாலை,
கலம்பகம், அந்தாதி, ஊசல் பாடிய போது திருவேங்கடமுடையான் தன்பேரிலும்
இவர் பாடவேண்டுமென தாமே கனவில் வந்துரைக்க இவர் அரங்கனைப்
பாடிய வாயால் ஒரு குரங்கனைப் பாடேன் என்றார். (குரங்கன் - குரங்குகள்
அதிகமாகத் திரியும் வேங்கடமலையில் இருப்பவன். மந்திபாய் -
வடவேங்கடமாமலை) திருவேங்கடமுடையான் எவ்வாறாயினும் இவர் வாயால்
பாடவேண்டுமென விரும்பி இவருக்கு கண்டமாலை என்னும் நோயை
உண்டாக்க அதனால் துன்புற்ற இவர் இதற்கு காரணம் தான்
திருவேங்கடத்தான் மேல் அபசாரப்பட்டதே என்று அறிந்து, அவ்வபசாரம்
நீங்க திருவேங்கடமாலை திருவேங்கிடத்தான் துதி ஆகியவற்றைப் பாட
வேங்கடத்தானும், காட்சி கொடுத்து நோய் நீக்கி இன்னருள் புரிந்தார்.

26. பிரம்ம சூத்திரம்

     வேதவியாசர் எழுதிய பிரம்மசூத்திரத்திற்கு மூன்று உரைகள் உள்ளன.

     1. ஆதிசங்கரர் அத்வைத பரமாக எழுதிய உரை ஒன்று
     2. மத்வர் துவைத பரமாக எழுதிய உரை ஒன்று
     3. ஸ்ரீராமானுஜர் வசிஷ்டாத்வை பரமாக எழுதிய உரை ஒன்று

     ஸ்ரீராமானுஜர் காஷ்மீரில் உள்ள சாரதா பீடத்திற்கு எழுந்தருளியபோது
சரஸ்வதி தேவி இவரிடமே தனது ஐயங்களைத் தீர்த்துக் கொண்டதன்றி
இவரது ஸ்ரீபாஷ்யத்தை