| சிரசாவகித்து, ஸ்ரீபாஷ்யகாரர் என்ற பட்டத்தையும் இவருக்கு அருளினாள். 27. பாஞ்சராத்ரம் திருமாலின் 5 படைகளின் அம்சங்களான சாண்டில்யர், ஒளபாசயனர், மௌஞ்சாயனர், கௌசிகர், பரத்வாஜர் இவர்களின் மூலமாய் வந்தது. 28. வைகானஸம் மரிசி, அத்ரி, கச்யபர் இவர்களின் மூலமாய் வந்தது. 29. அஷ்டாச்சரம் மலையின் சமீபத்திலாவது அல்லது மனதுக்கு உகந்த மனித நடமாட்டமில்லா இடத்திலாவது என்னை மனத்திலிறுத்தி (மஹாவிஷ்ணுவை) இம்மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். மந்திரங்களுக்கு, ரிஷி, சந்தஸ், தேவதை என்ற மூன்றும் வேண்டியதால் இம்மந்திரத்திற்கு சகல ஜீவாத்மாக்களையும் சரீரமாக உடைய நானே ரிஷி, வேதத்தின் முக்கிய மந்திர தேவதையான காயத்ரி, சந்தஸ், உயர்ந்த வஸ்துவிற்கும் உயர்ந்தவனாயிருக்கும் நானே தேவதை. இவ்வெட்டெழுத்துக்களை உடைய அஷ்டாச்சரம் என்ற மந்திரமானது அன்புடன் ஜெபிப்பவருக்கு இவ்வுலகில் வேண்டிய செல்வங்களையும் மேலான பதிவியையும் தரும். இம்மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபித்தால் ஆவர்த்தி கிட்டும். இம்மந்திரத்தை 2 லட்சம் முறை ஜெபித்தால் சுவர்க்கம் கிட்டும் இம்மந்திரத்தை 3 லட்சம் முறை ஜெபித்தால் வைகுண்டம் கிட்டும் இம்மந்திரத்தை 4 லட்சம் முறை ஜெபித்தால் எனதருகில் இருக்கும் ஸாமீப்யம் கிட்டும். இம்மந்திரத்தை 5 லட்சம் முறை ஜெபித்தால் என்னைப் போல் சங்கு சக்கரம் போன்ற திவ்யாதங்களுடன் 4 தோளுடன் விளங்கும் ஸாரூப்ய முக்கியம் பெறலாம். இம்மந்திரத்தை 6 லட்சம் முறை ஜெபித்தால் ஸ்வரூபங்களும் சகல பிரபஞ்சங்களும் விளங்கும். இம்மந்திரத்தை 7 லட்சம் முறை ஜெபித்தால் ஜீவாத்ம ஸ்வரூபம் தெரியும் |