பக்கம் எண் :

87

     8. கம்பர் பெருமானும் இந்த வல்வில் ராமன் என்னும் சொல்லை
எடுத்தாண்டுள்ளார். சீதையின் அழகைப் பற்றி சூர்ப்பனகை சொல்லக்கேட்ட
இராவணன் அவள் அழகு எத்தகையது என்றான். சீதையின் அழகை
ராவணனுக்கு சொல்வதை விடுத்து தான் இராமபிரானின் அழகுப் போதையில்
மயங்கிக் கிடப்பதை,

செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும்    
     சந்தார்ந்த தடந்தோளோடும் தாழ்தடக் கைகளோடும்
அம்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றமென்ன
     வந்தான் இவன்ஆகும் அவ்வல்வில் இராமன் என்பான்

     என்று இப்பெருமானின் பெயரையே சூர்ப்பனகை வாயிலாய் கம்பர்
தெரிவிக்கிறார்.

     திருஎவ்வுள் கிடந்தானை “தம்மன்யே ராகவம் வீர” என்று ராவணன்
போற்றியுள்ளதாக பூர்வாச்சாரியர் கூறுவர். இங்கு சூர்ப்பனகை வல்வில்ராமன்
என்கிறாள்.

     9. ஸ்ரீரங்கத்தைப் போலவே இத்தலமும் காவேரி கொள்ளிடத்திற்கு
மத்தியில் உள்ளது. தொண்டரடிப்பொடியாழ்வாரின் அவதாரஸ்தலமான
மண்டங்குடி இங்கிருந்து சமீப தொலைவில் உள்ளது.

     10. சீதையைத் தேடிவந்த இராமன் சடாயுவுக்கு இங்கு இறுதிக்கடன்
செய்ததை,

“தனமருவு வைதேகி பிரிய லுற்றுத்     
     தளர்வெய்திச் சடாயுவை வைகுந்தத்தேற்றி”
          என்று குலசேகராழ்வார் (746) குறிக்கிறார்.

     11. நான்கு கரங்களுடன் சங்கு சக்ரதாரியாக ராமன் சயன
திருக்கோலத்தில் உள்ள ஸ்தலம் 108 இல் இது ஒன்றுதான். இராமாயணத்தில்
இத்தலம் பற்றி,

பூத்புரி ஷேத்ர வந்தே புன்னைவந ஸம்ஸ்திதம்
    ஸௌமித்ரே சார சாஷ்டாநி நிர்மதிஷ்யாம பாவகம்
க்ருத்ராதம் திஷாஷாமி மத்க்ருதே நிதநம்கரம்
    - ஸ்ரீ ராமாயணம், ஆரண்யகாண்டம் 68-27
வைம் முத்தவா சிதலம் தீப்தா மரோப்ய பதகேச்வரம்
    ததாளைராமோ தர்மாத்மா ஸ்வபந்து பிவ துக்கித்
                                          68-31

விமாநே ஸோபநே அம்புஜஸ்ரீ ஸீஸ மக்ரதம்
க்ரூத்ராஜண் புஷ்கரணித்தீரே லஷமனோலஷ்மி ஸம்பன்ன”
 

     என்று குறிப்பிடப்பட்டுள்ளது.