பக்கம் எண் :

89

     இந்திரன் இத்தலத்தில் வந்துவேண்ட அவனது சாபம் தீர்ந்து இழந்தது
பெற்றான். சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ள அது கையில் ஒட்டிக்
கொள்ள அதைச் சுட்டெரித்து சாம்பலாக்குமாறு சிவன் அக்னிதேவனிடம்
செல்ல அக்னியால் அது முடியாமல் போனது மட்டுமன்றி அவனையும்
பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அப்பாபம் நீங்க அக்னி பகவான்
இத்தலத்தில் கடுந்தவமிருந்து எம்பெருமான் காட்சி தந்து சாபம் போக்கினார்.

     எல்லா தேவர்களுக்கும் அக்னி பதிலியாக இருந்தபடியால் அக்நிர்வை
ஸர்வ தேவர் என்பர் இத்தன்மைத்தான அக்னியின் தோஷமும், இந்திரன்
சாபமும் நீங்கினமையால் இத்தலம் தேவாதி தேவர்களின் ஸ்தலமாக
கருதப்படுகிறது.

     கீழேவரும் கவிதையைப் பாருங்கள். மேலே கூறிய கதை அனைத்தும்
அடங்கியிருக்கும்.
 

     ஆதிரங்கேச்வரம் வந்தே பாடலி வந ஸமஸ்திதம்
          ப்ருகு, அக்னி, காமதேனுப்யோ தத்தாபீதம் தயாந்திரம்
     விமானே ப்ரணவே ரங்க நாயக்யா ஸு ஸ மாசரிதம் ஸு ர்ய
          புஷ்கர்னி திரே சேஷஸ்யோபரி ஸாயிநம்

மூலவர்

     ஆண்டளுக்கும் ஐயன், தலையின் கீழ் மரக்காலும் இடது கரத்தில் ஓலை
எழுத்தாணியுடன், கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட திருக்கோலம்.

தாயார்

     பார்க்கவி, மந்திர பீடேச்வரி கமலவாஸிநி. ரங்கநாயகி.

உற்சவர்

     அழகிய மணவாளன் (ஸ்ரீரெங்கநாதன்)

விமானம்

     ப்ரணவ விமானம்

வ்ருட்சம்

     புன்னை, பாடலி

தீர்த்தம்

     சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம்