காட்சி கண்டவர்கள் காமதேனு, ப்ருகுமுனிவர், அக்னி பகவான், திருமங்கையாழ்வார். சிறப்புக்கள் 1. காமதேனு இங்கு தவம் இருந்த படியால் இத்தலத்தில் காமதேனுவுக்கும், காமதேனுவின் புத்திரி நந்தினிக்கும் சிற்பங்கள் உண்டு. 2. இத்தலமும் ஸ்ரீரங்கமும் பலவகைகளில் மிகவும் ஒற்றுமை வாய்ந்தது. ஸ்ரீரங்கத்திற்கு இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் ஓடுதல் போன்று இத்தலத்திற்கும் 2 கல் தொலைவில் இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் ஓடுகிறது. ஒரு காலத்தில் திருவரங்கம்போன்று இங்கும் 7 மதில்கள் இருந்ததாகவும் பிற்காலத்தே காலவெள்ளத்தே அழிந்துபட்டது என்றும் அறிய முடிகிறது. பரமபதத்தில் எம்பெருமான் வீற்றிருந்த திருக்கோலத்தில் உள்ளார் அங்கு விரஜா நதியும் உள்ளது. அங்கு இணையாக (ஒரே மாதிரியாக) இரண்டு தூண்கள் உள்ளது. நமது ஆத்மா அங்கு சென்றதும் பன்மடங்கு பெருத்துவிடுகிறது. அப்போது அந்தத் தூண்களைத் தழுவிக் கொண்டோ மானால் எமலோகம் இல்லாது போவதுடன் நித்ய சூரிகளாகவும் மாறி விடுகின்றோம். அது மாதிரியான இரண்டு தூண்கள் 108 திவ்ய தேசங்களில் திருவரங்கத்திலும், இந்த ஆதனூரில் மட்டுமே உண்டு. திருவரங்கம் கர்ப்பகிருகத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு தங்கத் தூண்களை மணத்தூன் என்றும் சொல்வார்கள். இதேபோன்று ஆதனூரிலும் எம் பெருமானின் கர்ப்பகிருஹத்திற்குள் இத்தூண்கள் உண்டு. இவைகளை இந்த மானிட சாரீரத்துடன் நாம் தழுவிக்கொள்வோமாயின் நாமும் எமனுலகம் செல்லும் பாக்கியத்தை இழக்கிறோம். 3. சரபோஜி மன்னருக்கும், இத்தலத்திற்கும் தொடர்புகள் இருந்ததை கல்வெட்டுக்களிலும், ஓலைச்சுவடிகளாலும் அறியமுடிகிறது. 4. மிகச் சிறப்புற்று விளங்கிய இக்கோவிலின் பழைய அமைப்பு பூமிக்கு அடியில் புதைந்துவிட அச்சமயம் |