பக்கம் எண் :

91

     காஷ்மீர் தேசத்து ராஜாவின் புதல்விக்கு (பேய்) பிர்ம்மராட்சஸு பிடித்து,
எவ்வளவு பாடுபட்டும் அதைத் தீர்க்க முடியாது அம்மன்னன் தவித்துக்
கொண்டிருக்கும் வேளையில் அவனது கனவில் தோன்றிய இப்பெருமான் இக்
கோவிலை செப்பனிடுமாறு தெரிவிக்க, அவன் பரிவாரங்களுடன் வந்து தங்கி
இப்போதுள்ள மாதிரியை ஒத்துக்கட்டி முடிக்க அவன் மகளைப் பிடித்திருந்த
பிர்ம்மராட்சஸு ம் ஒழிந்தது. எனவே இதுபோன்ற பில்லி, சூன்யாதிகளை
விலக்குவதிலும் இத்தலம் இப்பகுதியில் பெயர் பெற்று விளங்குகிறது.

     5. திருமுழிக்களத்து எம்பெருமானும் இப்பெருமானும் ஒருவரே என்பது
ஐதீஹம். என்னை மனங்கவர்ந்த ஈசனையென்று திருமங்கை தனது
மங்களாசாசனத்தை இப்பெருமானுக்காக ஆரம்பிக்கிறார். என்னை
மனங்கவர்ந்த என்று சொல்லி நம்மாழ்வார் திருமுழிக்களத்து
எம்பெருமானுக்காக எடுத்தாண்ட முழிக்களத்து வளத்தின் என்பதை இவர்
மூழிக்களத்து விளக்கினையென்று மங்களாசாசித்தார்.
 

     மூழிக்களத்தின் வளமாவது - ஸம்பத்து
          இங்கு ஆண்டளக்கும் ஐ யன் என்பதே
     ஸம்பத்திற்கு அடையாளமன்றோ

     6. திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இத்தலத்திற்கென்று தனிப்பாசுரமோ, மற்ற ஸ்தலங்கட்கு உள்ளதைப்போன்று
பதிகங்களோ இத்தலத்திற்கு இல்லை. தலைப்பில் காட்டப்பட்டுள்ள பாடலில்
பெரிய திருமடலில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் என்று ஒரேவரியில்
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

     7. திருமங்கையாழ்வார் அரங்கநாதனுக்கு திருமதில் கட்டும் பணியில்
ஈடுபட்டிருந்த போது சமயங்கையில் இருந்த பொருள் எல்லாம் தீர்ந்துவிட
கைங்கர்யத்திற்குப் பணம் இல்லையே என்று பெருமானிடம் வேண்ட
கொள்ளிடக்கரைக்குவா பணந்தருகிறேன் என்று சொல்ல அவ்விதமே வந்து
நிற்க, எம்பெருமான் தலைப்பாகை அணிந்து கையில் ஒரு எழுத்தாணி,
மரக்கால் சகிதிமாய் ஒரு வணிகரைப் போன்று வர, இவரைக் கண்ட
திருமங்கை, யாரென்று வினவ, அதற்கு அந்த வணிகர் உம்பொருட்டே