இத்தலத்தின் கோபுரத்தில் மஹாவிஷ்ணு சிலை உள்ளது. “ஒங்காரோ பகவான் விஷ்ணு” என்ற ப்ரமானத்தின் பேரில் ப்ரணவ விமானத்தில் வாசுதேவன் உள்ளான். இவன் திருவடி தெரிந்துவிட்டால் இந்த யுகமானது (கலியுகம்) முடிந்து பிரளயம் உண்டாகும். இந்தச் சிலை வளர்ந்து வருவதாக ஒரு ஐதீகம். இப்போது முழங்கால்வரை தெரிகிறது. இச்சிலை வளர்ந்து வருவதாக இங்குள்ள பெரியோர்கள் கூறுகின்றனர். 9. இவ்வூருக்கு அருகே நரசிம்மபுரம் என்ற சிற்றூர் உள்ளது. இது ஒரு காலத்தில் மிகச்சீரும் சிறப்புடன் விளங்கியதோடு இத்தலத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. இந்தக் கிராமம் சரபோஜி மன்னரால் அஹோபில மடம் 25வது பட்டத்தின் ஜீயர் ஸ்வாமிகளுக்கு அளிக்கப்பட்டது. இவரைப்பின் தொடர்ந்து 26வது பட்டத்தின் ஜீயர் சுவாமிகள் 30,37,38வது பட்ட ஜீயர்களும் இங்கேயே எழுந்தருளி இத்தலத்தினையும் கவனித்து இவ்விடத்திலேயே அடங்கியுள்ளனர். இவர்களின் நினைவாக இன்றும் 5 பிருந்தாவனங்கள் இங்கு உள்ளன. இன்றும் இத்திருத்தலம் (ஆதனூர்) அஹோபில மடத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்துவருகிறது. அஹோபிலம் தான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த இடம். இதன் நினைவாகவே இங்கு தங்கியிருந்த அம்மடத்தின் ஜீயர்களும் இவ்வூருக்கு நரசிம்மபுரம் என்றே பெயரிட்டனர். இந்த அஹோபில மடத்தின் 41வது பட்ட ஜீயர் சுவாமிகள் தான் ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு தெற்கு கோபுரத்தில் மீதியிருந்த வேலையை முடித்து ஆசியாவிலேயே பெரிய கோபுரமாகச் செய்துவிட்டார். 10. ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்ரீமதி ஆண்டிபயோடின் என்ற பெண்மணியும், அவளது கணவன் தியோடர் மில்லர் என்பவனும் இல்வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்து ஆலய ஆராய்ச்சி செய்யுங்காலையில் இவ்விருவரும் (ஒருவருக்கொருவர் தெரியாமல்) இச்சன்னதியில் எதிரும் புதிருமாக தென்பட, மெய்மறந்து மயிர்சிலிர்ப்ப, ஒருவரையொருவர் ஆரத்தழுவி மீண்டும் தாம்பத்யம் தொடங்கினர். 11. இலங்கையிலிருந்து அயோத்தி செல்லும்போது ஆஞ்சநேயர் இவ்வூரில் இரண்டு தினங்கள் தங்கி இளைப்பாறி |