ஸந்தியா வந்தனமும் செய்துவிட்டுப் போனதாகவும், உடனே ஸ்ரீஇராமபிரான் இங்கே வந்து எனது சகாயான் இங்கு வந்தாரா என்றுகேட்டுத் தனது திருவடியை வைத்துவிட்டுச் சென்றதாகவும், வரலாறு. இந்த அஞ்சநேயருக்கு “வீரசுதர்சன ஆஞ்சநேயர்” என்பது பெயர். ஸ்ரீராமன் திருவடியும், ஸ்ரீஆஞ்சநேயரும் இப்போது இங்கு உளர். சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் இந்த ஆஞ்சநேயர். 12. ஒரு காலத்தில் மிகச் சிறப்புடன் நடந்துவந்த இத்தலத்தின் பரிபாலனத்திற்கு நித்யபடி, தளிகை வந்ததாகவும், அந்த இடம் இப்போது கிராமமாகி அந்தப் பழைய பெயரிலேயே (தளிகையூர்) தளியூர் என்று வழங்கிவருகிறது. 13. திருவரங்கத்து அரங்கனைப் போல இப்பெருமானும் காணத் தெவிட்டாத பேரழகு வாய்ந்தவர். |