விரும்பியுள்ளோம். நீ ஆண்டுக்கொருமுறை இங்குவந்து எம்மை வழிபட்டுச் செல்லலாம், என்றார். ப்ரண வாக்ருதியின் இன்னொரு பிரிவான வைதிக விமானத்துடன் யாம் குடந்தை சென்று ஹேம மஹரிஷிக்கு அருள் புரிந்து லட்சுமி தேவியையும் மணக்கவிருக்கிறோம் என்று சொல்லி அர்ச்சா ரூபியானான். அப்போதே கையில் சார்ங்கம் என்னும் வில்லுடன் மகர சங்கராந்தியன்று வைதீக விமானத்துடன் குடந்தை வந்திறங்கிய எம் பெருமான் கோமள வல்லியை ஏற்றுக்கொண்டு (மணம் செய்து) ப்ருகு முனிவருக்கும் பேரருள் புரிந்தார். இவ்விதம் ஸ்ரீரங்கநாதனும் இவ்விடம்வந்து சேர்ந்தார். மூலவர் சாரங்க பாணி, ஆராவமுதன் சயனதிருக்கோலம், கிழக்கு நோக்கிய திருக்கோலம். தாயார் கோமளவல்லி உற்சவர் பெயர்களே தீர்த்தம் ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு விமானம் வைதிக விமானம் காட்சி கண்டவர்கள் ஹேம மஹரிஷி சிறப்புக்கள் எண்ணற்ற சிறப்புக்களை கொண்டது இத்திருக்கோவில் 1. மொத்தம் 52 பாசுரங்களில் முதலாழ்வார்கள் மூவருடன் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். திருமலைக்கும் அரங்கத்திற்கும் அடுத்து இங்குதான் ஆழ்வார்களின் மங்களாசாசனம் அதிகம். அரங்கம் 11, திருமலை 10, இங்கு உள்ள ராஜகோபுரம் உயரத்தில் மூன்றாவதாகும். முதலாவது ஸ்ரீரங்கம் 236 அடி உயரம் ஆகும். இரண்டாவது |