திருத்தொண்டர் புராணமும் - உரையும்11

6.
அறிவினும் அன்பினும் ஆன்ற ஐய,
     அன்பார்ந்த வணக்கம் பல. தங்களை நாளைப்போது சிதம்பரத் திருத்தலத்தின் ஆயிரக்கால் மண்டபத்திற் கூடும் ஆன்றோர் சபையில் கண்டு களித்துச், சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் சார்பில், வந்துள்ள ஓர் பாராட்டுப் பத்திரத்தை வாசித்தளிக்கவேண்டும் என்னும் பெருவேட்கையுடனிருந்தேன்.
     யான் 7-7-48 முதல் நேற்றுவரையில் வேலூர், குருராயப்பேட்டை, திருக்கழுக்குன்றம் முதலிய ஊர்களுக்குப் பயணஞ்செய்ய நேர்ந்தது. நேற்றுந் திருக்கழுக்குன்றில் நடந்த திருமுறை மகாநாட்டிலும், சைவ சித்தாந்த மகா சமாஜக் கூட்டத்திலும் கலந்துகொண்டு, கழுக்குன்றத்துச்சியான் கழலை வணங்கினேன். இப்பயணங்களில் கண்விழிப்பும் வயிற்றிற் சிறிது கோளாறும் ஏற்பட்டன. உடம்பு நன்னிலையில்லை. தொடர்ந்து இன்றிரவும் பயணஞ்செய்யத் துணிபு பிறக்கவில்லை. எளியேன் புண்ணியக்குறைவு இங்ஙனம் என்னைத் தடுத்துநிற்கிறது. என்செய்கேன்! தங்கள் தவக்கோலத்தையும் அன்பர்கள் திருக்கூட்டத்தையும் அகக்கண்ணால் மட்டும் கண்டு அமையக்கடவேன்.
     "தோன்றிற் புகழொடு தோன்றுக" என்ற தமிழ்மறைக்கோர் பெரிய எடுத்துக் காட்டாகத் தாங்கள் ஓர் அரும்பெரும் அறிவுத்தொண்டை - அன்புத்தொண்டைச் - செய்துமுடித்திருக்கிறீர்கள். அன்புடன் தமிழுலகம் வாழ்த்தி வணங்கத் திருநெறித் தலைவராய் விளங்குகின்றீர்கள். தாங்கள் திருத்தொண்டர் புராணத்திற்குச் செய்தருளியுள்ள பேருரை பல்விதப் பெருமைகளையுடையது. தங்கள் புலமையின் நுணுக்கமும் மாட்சியும், சைவப்பற்றின் அழுத்தமும் விழுப்பமும், சிவநெறியானது இச்சீர்குன்றின காலத்தும் செழிக்கவேண்டும் என்னும் விழுப்பமாங்கருத்தும் அதில் தெள்ளிதின் விளங்குகின்றன. தங்கள் அறிவுத் தொண்டிற்காகச் சைவ உலகம் என்றென்றும் தங்கட்குக் கடமைப்பட்டுள்ளது.
     தங்கள் தவவுடம்பு, ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜப்பெருமான் தண்ணருளால் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நன்னிலையிலிருந்து, தங்கள் அரும்பெருந்தொண்டிற் குறுதுணையாயிருக்கவேண்டும் என்றும், தாங்கள் விரும்பும் நலன்கள்யாவும் அப்பெருமானருளால் வாய்க்கவேண்டும் என்றும் அவனை வந்தித்துப் பிரார்த்திக்கின்றேன்.
     பாராட்டு விழாவானது பலவகையிலும் சிறப்புடன் நிகழ்வதாக.
175-ஏ, லாயிட்ஸ் ரோட்,
சென்னை (14) 12-7-48
அன்புள்ள,
ச. சச்சிதானந்தம் பிள்ளை,          
ஓய்வுபெற்ற ஜில்லா அதிகாரி.
7.
திருவாளர் - ரா. சண்முகசுந்தரம் செட்டியாரவர்கட்கு,
திருவொற்றியூர், சென்னை.
அன்பிற் சிறந்த ஆருயிர் நண்பரவர்க்கு, வணக்கம்.
     நலன். நலன் தெரிவித்தருளுக. தங்கள் 23-6-48 கடிதம் பெற்றுக் கழிபேருவகையுற்றேன். திருத்தொண்டர்புராண விரிவுரை எழுத்துப்பணி முற்றுப் பெற்றமை சைவ உலகுக்கும், தமிழுலகுக்கும் பெரும்பேறாகும். திரு. முதலியாரவர்