|
10. |
அன்புமிக்க பெரியாரவர்கட் கனேக வணக்கம். நலம்; விரும்புவததுவே. தாங்களன்புடனனுப்பிய பெரியபுராண விரிவுரை நிறைவு விழா அறிக்கை பெற்றேன். தங்களுடைய முயற்சி நிறைவுபெற்றதுபற்றி மகிழ்ச்சியடைகிறேன். தங்களால் 12, 13 தேதிகளில் நடத்தப்பெறும் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெறவேண்டுமெனத் திருவருளைச் சிந்திக்கின்றேன். |
வடக்குச் சித்திரை வீதி, | மதுரை 9-7-48 | | தங்கள், | இ. ம. கோபாலகிருஷ்ணன் கோன் | | | |
11. |
(By Telegraph) |
Siva Kavimani - Subramania Mudaliar, c/o Temple, Chidambaram; Invoking Lord Siva blessing. |
DR. ANNAMALAI |
Tenkasi |
12. |
அன்பும், அறிவும், சீலமும், ஆற்றலும், பொறுமையும், தெளிவும், தேற்றமும், ஒருங்கே நன்கமைந்த ஐயா அவர்கள் திருவடிகட்கு அடியேன் மனமுவந்த வணக்கம். தங்களுக்கு நலத்தோடு ஆயுள் நீட்டிக்கப் பெருமானை பிரார்த்திக்கிறேன். |
தாங்கள் திருக்கடவூருக்குச் சஷ்டியப்தபூர்திக்கு வந்திருந்தபோது பிச்சக்கட்டளை ஆபீஸில் சொற்பொழிவு (கலயனார் சரித்திரம் என்ற ஞாபகம்) ஆற்றி வரும்போது ஸ்ரீமான் ஆலத்தம்பாடி ஐயா அவர்கள் பெரியபுராண உரை இவ்வளவு விரிவாகப் போய்க்கொண்டிருந்தால் முடிவைப்பெறாது போய்விடும்; ஆனதால் சுருக்கமாக எழுதினால் முடிந்துவிடும் என்று சொல்லியபோழ்து அடியேன் சொன்னது : "Rev. G. U. Popeக்கு Master Baliol etc. yu will live to finish it" என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். தாங்களும் அது சரிதான் என்று ஒப்பி உறுதிகொண்டீர்கள். |
புராணமும் பெரியது; உரையும் விரிந்தது. |
குரு உபதேசத்திற்கு "ஆண்டு பன்னிரண்டாகில் அருளிச்செய்வா" என்று சாத்திரத்திற் கூறிய கால அளவையும் கடந்து 2 வருடம் அதிகப்பட்டது. ஆகவே எம்பெருமான் திருவருள், தங்கட்கும் தங்கள் உற்ற துணைவியம்மையர்க்கும் சித்தித்ததாகவே நிச்சயப்பட்டது. |
இப்பெரியபுராணம் முதன்மைச் சேக்கிழாரால் தொடங்கிப் பூர்த்தியானது சிதம்பரத்தில். அதற்கேற்ப இவ்விரிவுரையும் முதன்மையாராகிய தங்களால் தொடங்கப்பெற்று பூர்த்திபெற்றுச் சிதம்பரத்திலே தெரிசனத்தன்று ஸ்ரீகுஞ்சித பாதத்திற் சார்த்தப்பெற்று யாவரும் காண இருப்பதும் அவன் திருவருளே! |
திருக்கடவூர்த் திருக்கைவாஸம் பிள்ளையவர்கள் ஸ்ரீ அபிராமி அமுதகடேசர் தெரிசனத்திற்குத் தங்கள் எல்லாருடைய வரவையும் எதிர்பார்த்திருக்கிறார்கள். |
தங்கள் குடும்பத்தில் அதாவது குலத்தில் பெரியபுராணம் ஊறியிருப்பதால் இவ்விரிவுரை எழுதிமுடிக்க வசதி ஏற்பட்டதாக எண்ணினேன். |