|
3 அளியும் கொடையும் ஒருங்கமைந்த அன்பர்க் கன்பர் அமிழ்தூறிக் |
களிசெய் மொழியும் முருகனுயிர்க் காதற் பண்பும் திருமுறைநூல் |
வழியே என்னப் பன்முறையும் மண்ட லித்தே வரும்பயில்வும் |
விழியே என்னப்புகழ்பொருள்நூல்விரிப்பும் உடையார் வாழியரோ. |
| அன்புள்ள | திருவள்ளுவரகம் - ப. இராமநாதன் | | | |
15 |
அன்பிற் சிறந்த ஐயா அவர்களுக்கு வணக்கம். |
இப்பொழுது தில்லையில் இருக்கும் பாக்கியம் எனக்கு இல்லாததுபற்றி வருந்துகின்றேன். பெரியபுராணம் பாடிய சேக்கிழார் திருப்பணியைவிட அதற்கு உரை அருளிய தங்கள் திருப்பணி பெரிதென்று எனக்குத் தோன்றுகிறது. லோகோபகாரி யின் சார்பாகவும், எனது சார்பாகவும் எனது வணக்கத்தை இதன் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருந்து, நல்ல திருப்பணிகள் செய்யுமாறு அம்பலவாணன் அடியிணைகளைப் பரவுகின்றேன். வணக்கம். |
17-ஏ கிடங்குத் தெரு, | சென்னை, 12-7-48 | | தங்கள் அன்புள்ள | பரலி - சு. நெல்லையப்பன் | லோகோபகாரி பத்திரிகாசிரியர் | | |
16 |
அன்பிற் சிறந்த அருளாள! வணக்கம் பல. |
நலம். பெரியபுராண விரிவுரை எழுத்து நிறைவு விழா அழைப்பிதழ் கிடைக்கப் பெரிதும் மகிழ்கிறேன். எங்கள் சேக்கிழாராகிய தாங்கள் இப்பெரும் புண்ணியப் பணியில் ஈடுபட்டு அதனை நிறைவேற்றியது யாவற்றையும் இயங்குவிக்கும் நமது கூத்தப்பெருமானின் பெருமையும் அருளுமே. அவன் அருளைத் தாங்கள் நிறைந்தவகையில் பெற்றமையால்தான் இப்பெருங் காரியத்தைச் செய்துமுடிக்க வல்லவர்களானீர்கள். சேக்கிழாருக்கு ஒரு அநபாயச் சோழனிருந்து தனது அன்பையும் பெருமையையும் சிறக்கச்செய்தான். இக்காலத்து அத்தகையபெருமான் இல்லாதிருக்க நமது நடராசப்பெருமானே தங்களுக்கு எல்லாவிதப் பெரும்பேறுகளையும் ஈந்து, நீண்ட ஆயுளையும், உடல்வலிமையையும், தந்து அருள்புரிவானாக. |
நாளை ஆயிரக்கால் மண்டபத்தில் நடக்கும் சிறப்புக்கூட்டம் இனிது நடைபெறுவதாக. வணக்கம் பல. |
8-9, சிங்கண்ண நாயக்கன் தெரு, | ஜி. டி. சென்னை, 12-7-48 | | அன்பன் | ஜே. எம். சோமசுந்தரம் | | | |
17 |
திருவாளர் - ரா. சண்முகசுந்தரம் செட்டியாரவர்களுக்கு, |
திருவொற்றியூர், சென்னை. |
அன்புமிக்க ஐயா, |
வணக்கம். நலன். நலனறியும் அவாவுடையேன். தங்கள் 23-6-48 கடிதத்தால் நமது ஒப்புயர்வற்ற பெரியார் உயர்திரு, சிவக்கவிமணி, சி. கே. சுப்பிரமணிய |