|
19 |
வாழ்த்து |
தேவர்க்கும் அரிதாய திருத்தொண்டர் புராணவுரை சேக்கி ழார்முன் |
யாவர்க்கும் இனிதாக இருந்துரைக்க மண்டபத்தே எழுந்த கூத்தர் |
மூவர்க்கும் அறியவொணா முளரிமலர்த் தாள்சார்த்தி முற்றச் செய்தான் |
பாவர்க்கநலமுணருங் கோவைச்சுப் பிரமணியப் பத்திமானே. நலம்பெருகுக! |
பாலறாவாயர் நிலையம், | சம்பந்தர் தெரு, | தேவகோட்டை, 25-7-48 | | | வயிநாகரம் - வே. இராமநாதன் செட்டியார், | பாலகவி, தருமபுர ஆதீன வித்துவான் | |
|
20 |
திருத்தொண்டர் புராணப் பேருரை நிறைவு விழா - தில்லைச் சிற்றம்பலத்தில் 12-7-48, 13-7-48ல் நடைபெறும்போது - கோவைத் தமிழ்ச் சங்கத்தார் |
தந்தளித்த |
வாழ்த்துப் பா |
யவன நாட்டில் எவரும் வியந்த |
கவன ஆற்றற் காட்சி ஏழாம்; |
எவனும் வியந்த இவற்றின் மேலாய் |
அவனும் போற்ற அளித்தாய் உரைநீ. |
(1) |
பெரிய புராணம் பெரிதோர் வியப்பே, |
உரிய தமிழர் உணர்ந்தார் இல்லையே, |
அரிய உணர்வை அளிக்கத் தொடங்கித் |
தெரிய வைத்தாய் தெளிந்த உயர்வால் |
(2) |
பொருளை ஏழாய்ப் புகன்றார் பிறரோ, |
இருளை ஓட்டி இன்பம் தாலில் |
அருளைக் கொட்டும் அரிய நூல்சொல் |
தெருளை ஈந்தாய் திரள்ஈ ரேழில். |
(3) |
கோவைத் தமிழர் குழுவார் செய்த |
சேவை யாதோ செப்ப மாட்டோம், |
தேவை இதுவே தெளிவீர் என்றே |
ஏவல் இட்டாய் இதுதான் அறிவோம். |
(4) |
எங்கள் சங்கம் இனிய புகழைத் |
திங்கள் அளியில் தேர்ந்து வைத்தாய் |
கங்குல் பகலும் கவின்நின் உரையில் |
துங்கப் பொருளின் தொடர்பை அளித்தாய். |
(5) |
பூவின் மணமோ பூவைப் பிணைநார் |
தாவின் மணத்தில் தகுமாம், அதுபோல், |
1. Seven wonders of the world. |