திருத்தொண்டர் புராணமும் - உரையும்19

நாவின் வல்லாய், நாமும் நின்னால்
பாவின் பொருளைப் பண்பாய்ப் பெற்றோம்.
(6)
இந்தப் பொருளை ஏற்ற யாங்கள்
எந்த முறையில் ஏத்தித் தருவோம்,
சிந்தை இன்றிச், செம்மால், என்றும்
எந்தை அருளால் இனிதே வாழி.
(7)
நலம், நலம், நலம்.
கோவை
12, 13-7-48
கோவைத் தமிழ்ச் சங்கத்தினேம்
21
பொன்னென்கோ, மணியென்கோ, பாலென்கோ, தேனென்கோ,
     பொருந்துசிவ, போகம், என்கோ,
மன்னென்கோ, மலரென்கோ, மணமென்கோ, மழையென்கோ,
     விருந்தென்கோ, மருந்தே, என்கோ,
உன்னரிய, கரும்பென்கோ, கண்டென்கோ, இவையனைத்தின்,
     பயனென்கோ, உயிரே, என்கோ,
என்னென்கோ, குன்றைமுனி, கவிநயங்காண், கோவைமுனி,
     உரையகலத், தியல்பை மன்னோ.
இங்ஙனம்                   
ச. ஆ. இரத்தினவேற் புலவர்,      
காரியதரிசி, ஸ்ரீ சேக்கிழார் திருவருட் கழகம், சிதம்பரம்.
22
வாழ்த்து மொழி
தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
வாக்கினாற் சொல்ல வல்லபிரா னெங்கள்
பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்
சேக்கி ழானடி சென்னி யிருத்துவாம்.
     மூர்த்தி நாயனார் புராணத்தில் "எந்தெம் பெருமக்களை யாவரே தடுக்கவல்லார்" என்பது நமது சேக்கிழார் நாயனார் அவர்களின் வாக்கென்றால் அவரைத் தவிர அடியார்களின் பெருமையைத் தெரிந்த புராணிகர்களே இல்லை எனலாம்.
     இப்பெரும் புராணத்திற்கு விரிவுரை நமது சிவக்கவிமணி சுப்பிரமண்ய முதலியார் அவர்கள் எழுதினால் அவரின் பெருமையை சிற்றறிவுடைய நாயினேனால் வரையவியலுமா? ஆயினும் ஆசையால் எழுதினேன். நிற்க.
     கயப்பாக்கம் சிவத்திரு சதாசிவம் செட்டியார் அவர்களால் பெரியபுராண விரிவுரை வெளிவரும் என்று கேள்வியுற்று மேற்படி சிவக்கவிமணியவர்களுக்கு எழுதினேன். அதற்கு அவர் சில இடைஞ்சலால் நின்றுவிட்டது; வெளியானதும் தெரிவிக்கிறேன் என்று பதில் விடுத்தனர். அது கண்டு நம் தமிழ்நாடு புண்ணியம் செய்யவில்லையே என்று கவலையற்றிருந்தேன். சில ஆண்டுகளுக்குப்பின் முதலியார்