2முன்னுரை

படங்கள்
     அதற்குரிய திருப்பிடவூர்ப் படங்களைத் தந்தருளிய திருத்தருமபுரம் ஆதீனம் மகாசந்நிதானங்களுக்கு எனது நன்றி உரித்து. சஞ்சிகைகளிற் காணப்படும் படங்கள் பெரும்பாலும் அவற்றின் வெளிப்பாட்டுக்குதவிய பெருமக்களே அன்புடன் எடுத்து உதவினார்கள். ஏனைச் சஞ்சிகைகளின் படங்களை எடுத்து உதவிய (1) கும்பகோணம் அன்பர் திரு. குஞ்சிதபாதம் செட்டியார் அவர்கள், (2) திருச்சி - கொசூர் - கர்ணம் திரு. B. வைத்தியலிங்க முதலியார் அவர்கள், (3) திருக்கழிப்பாலை திரு. சின்னையா முதலியார் அவர்கள் முதலிய எல்லா அன்பர்களுக்கும் என் நன்றி உரியது. 25 - 26 சஞ்சிகைகளுக்கு வேண்டிய காகிதம் அரசாங்க நிலவரப்படி கிடைக்க, அன்புடன் உதவிய மந்திரியார் திரு. T.S. அவிநாசிலிங்கஞ் செட்டியார் அவர்களுக்கு எனது நன்றி செலுத்துகின்றேன். இவ்வாறே எஞ்சிய பகுதிகளுக்கும் வேண்டிய காகிதம் பெற உதவி பெறுமாறு அவர்களை வேண்டிக் கொள்கிறேன். இவ்வுதவி அடியேனுக்கன்றிச் சைவத்தமிழ் உலகிற்குச் செய்த பேருதவியாகும்.
     சென்னைப் பல்கலைக்கழகத்தார் ஒப்பிய நன்கொடையின் ஒரு பகுதி ரூ.500 இப்புராண உரை நிறைவேறிய பின் தருவதாக நிறுத்தி வைத்திருந்தார்கள். அதனை இப்போதே உதவிய பெருங்கொடைக்கு என் நன்றி உரியது. இவ்வுரைப் பணியினை முன்னறியாது புத்தகத்தை வீ. பி. மூலம் பெற்ற ஞான்றே ரூ. 50 நன்கொடை அனுப்பிய அன்பர் சேலம் - இராசிபுரம் - ப. சுப்பிரமணிய பண்டாரம் அவர்களுக்கும் என் நன்றி உரியதாகும்.
நன்றி
     தம் வருத்தமும் உடல் நலக்குறையும் துன்பங்களும் பொருட்படுத்தாது இப்பகுதிக்குரிய காகிதங்களைப் பல முறையும் அலைந்தலைந்து தேடிப் பெற்றும், மற்றும் பல வகை உதவிகள் செய்தும் சலியாது முயன்றுவருந் தவப்பெருந்தொண்டர் திருத்துறையூர் திரு. K. ஆறுமுக நாயனார் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் கடப்பாடும் உரியன. படங்களுள் 20 படங்கள் வரை கும்பகோணம் உயர் சைவத் திரு. P.T.S. குமாரசாமி செட்டியார் அவர்கள் (குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டத்தலைவர்) மூலம் கிடைத்தன. அவற்றை இலகுவான செலவில் ஆக்கியளித்த அன்பர், குடந்தைச் சிவனடியார் திருக்கூட்ட நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் திரு. வி. ராமசாமி பிள்ளை அவர்கள். அவரது அலுவலாளர் அன்பர் திரு. வி. ராமரத்தினம் ஐயர் வண்டிச் செலவு முதலிய ஒன்றுமின்றித் தமது சொந்த சைகிளில் ஏறத்தாழ 60 மைல் தூரம் வரை தலங்கள் தோறும் சென்று படம் எடுத்துதவியவர். இவர் ‘எனக்கு இப்பணி கிடைத்ததே' என்று குழையும் அன்புடையவர். இவர்கள் அன்பு பாராட்டத்தக்கது. எல்லோருக்கும எனது நன்றி உரித்தாகுக.
     எஞ்சிய பகுதிகளும் விரைவில் வெளிவரத் திருவருள் துணை செய்வதாக, அன்பர்கள் ஆசிபுரிவார்களாக.
கோயம்புத்தூர் சேக்கிழார் நிலையம்}
19-12-1948
    அடியேன்
C. K. சுப்பிரமணிய முதலியார்
    உரைஆசிரியன்