|
-தில் நீங்கா இளமைபெற்று எங்களையும் வாழ்விப்பான்வேண்டி என்றுமிளையவனாகிய எங்கள் செட்டிக்குமரனை மனமொழி மெய்களால் வாழ்த்துகின்றோம். |
| வாழ்க தமிழ்! வாழ்க சைவம்!! வாழ்க நம்மணி!!! |
| | இங்ஙனம் | சைவசமய பக்தஜன சபைகள் | | | |
| 24 |
| பாராட்டுரை |
| சைவ உலகில் தனிப்பெரு மாண்பினீர்! |
தொண்டை மண்டல வேளாண் மரபில் மாபெருந் தவத்தராகும் கோவை - கந்தசாமி முதலியார் அவர்கள்தம் அருமந்த மைந்தராய் அவதரித்து, ஆங்கிலமும் இன்தமிழும் கலந்து பயின்று தேர்ந்து, மன்பதை உலகில் மக்கட்பணியே சிறப்புடைத்தெனத் தாங்கள் தமிழ்த்தாயின் தலைமகனாம் வீரஞ்செறிந்த திரு. வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களுடன் துணைநின்று சிறந்த தொண்டாற்றியது நாடெங்கும் அறிந்த தொன்றாம். இவ்வரசியற்றொண்டு பின்னர்ச் சிவத்தொண்டாய் மலர்ந்ததுகண்டு யாங்கள் மகிழ்கின்றேம். |
| அன்பில் விளைந்த அருள் பழுக்குங் கனியே! |
பன்னிரண்டாமாண்டில் தாங்கள் தங்கள் அருமைத் தந்தையார் திருத்தொண்டத்தொகை கற்பிக்கக் கசடறக் கற்றீர்கள். அது தங்கள் உள்ளத்தில் விதைத்தவித்தாம். தென்தமிழைச் திருச்சிற்றம்பலம் பிள்ளையவர்கள்பால் பயின்றீர்கள். இவர் பாய்ச்சிய அன்பு நீரால் தங்கள் தமிழ்மணம் பணைத்தோங்கியது. சைவத்திருமுறைகளில் மனம் ஊன்றி நிலைத்தது. சைவ நன்னெறியின் தூய ஒழுக்கத்திற்றலைப்பட்டீர்கள். பின்னர்க் களைகட்டெறிந்தார் சிவத்திரு - கயப்பாக்கம் - சதாசிவச் செட்டியார், பி. ஏ. அவர்களாவர். அவர்கள் நல்லுறவு தங்களைப் பெரிய புராணத்துள் புகுத்தியது; அன்பைப் பெருக்கியது. அருள்வேட்கை முதிர்ந்தது. அதன் முடிவில் தோன்றும் சிவபோகமாக வந்தது இன்று உலகம் போற்றும் தங்கள் திருத்தொண்டர் புராண விரிவுரை யென்பேம். அது சிவக்கவிமணி விளக்கமெனவே உலகில் விளங்குக என இறைவனை இறைஞ்சுவேம். |
| காதற் கசிவொடும் கருத்துரைக்கும் பெற்றியினீர்! |
அளவிலாப் புகழுடையராகும் அளவிலா அடியார் பெருமையை நாளும் நினைந்து கசிந்துருகிக் கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்துடையராய்த் தாங்கள் திகழ்கின்றீர்கள். "சூழ்ந்தோர் தம்மைத் தன் வண்ணமாக்கும் அருளும் சிவபூசை மறவாச் சிந்தையும், திருமுறைகள் மறவாத் திருவாயுமுடையார் எங்கள் சிவக்கவிமணி" எனச் சைவ உலகம் தங்களை அன்புரிமையுடன் போற்றுகின்றது. இன்னவகையே தாங்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு இனிது வாழவேண்டுமென்று எல்லாம் வல்ல பரம்பொருளாகும் மாதொரு பாகனாம் ஆனந்தக் கூத்தனை வழுத்துகின்றோம். |
| | இங்ஙனம் | சைவ சித்தாந்த மகா சமாஜந்தினேம் | | | |