22முன்னுரை

25
பாராட்டுரை
செந்தமிழன்ன செம்மனப் பெயீர்!
     தென்னாடு, தமிழியல்பால், உலகம் முழுவதும் புகழுடையது. கொங்குநாடு, அதன்கண் மணமும் இனிமையு முடையதென்பது அதன் பெயரானும் விளங்கும். கோவை மாவட்டம் அதன்வழி, முதுநலமிக்கது. இனிமை கெழுமிய திருப்பேரூரென்னுந் திருப்பதியை அருகிலுள்ள கோவைமாநகர், ‘கோவைத் தமிழ்ச் சங்க'மும் ‘சேக்கிழார் நிலைய'மும் அமையும் பெருமையில் ஓங்கித் தங்கள் உறைவினைத் தாங்கும் அரும்புகழ் சிறந்தது! வாழி அந்நலம்!
புலமையும் கலையும் அருளும் உடையீர்!
     மொழிப்புலமையும், கலைத்திறமையும், அருட்பெருக்கமும் ஒருங்கு பொருந்திய நலத்தால், தங்கள் நினைவு - மொழி - செயல் ஒவ்வொன்றும் இத் தமிழகத்திற்கு வைப்பாய் உள்ளது. ஆராய்ச்சியை மெய்யுணர்வால் மாட்சிமைப்படுத்தும் தங்கள் அருளழகால், தமிழகம் பெருவாழ்வு பெறுகின்றது. கல்வியை, செல்வத்தை, அலுவலை, செல்வாக்கை, வாழ்க்கைப் பேற்றை எங்ஙனம் இயக்கி நலனுறுத்துவதென்று நாகரிக உலகிற்கு எஞ்ஞான்றும் அறிவுறுத்தும் ஓர் அழியாத பேரோவியமாகத் திகழ்வது வாழ்க்கையியல்! வாழி அந் நனி நாகரிகம்!
சேக்கிழார் சீர்பரவும் சிவக்கவி மணியீர்!
     தொண்டர் சீர் பரவுதல், முற்றிய மெய்யுணர்வின் நிகழ்ச்சி என்ப! தொண்டர் சீர் பரவி அடியார்க்கு அடியேன் எனத் திருத்தொண்டப்பயன் அருளினர் ஆளுடைய நம்பிகள்! அப் பெருமாற்கும் அடியேனென அதனைப் பன்னலங்களானும் பெருக்கித் திருத்தொண்டர் புராணம் அருளினர் தொண்டர் சீர் பரவுவார்! பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய அச் சிவக்கவிக்கும் அடியேனென அதன் நலனாராயுஞ் சிவக்கவிமணியாய்ப் பெரியபுராணப் பேருரை விளக்கம் இயற்றியுதவிய சைவப்பயன் தங்களுடையது; வாழி அத் தாழ்வெனுந் தன்மை!
செயற்கருஞ் செய்கை செய்த தீரரீர்!
     தங்கள் பெரிய புராணப் பேருரை விளக்கம் செயற்கரிய செயல்! மொழித்திறம், வரலாறு முதலிய பல்வகைக் கலைத்திறம், உரைத்திறம், பல்காலும் பரநாத ஒலி பயிலும் நல் அருட்டிறம் முதலிய உயர்நலம் பலவும் வாய்ந்து திகழ்கின்ற பெருஞ்செயல்! பெரும! திருவருளால் தாங்கள் அதன் புகழ்போல நலம் பலவும் ஓங்கி நீடினிது வாழி!
சென்னை,
05-07-48
இங்ஙனம்
சென்னைச் சிவனடியார் திருக்கூட்டத்தினர்
 
26
வாழ்த்து
     "தில்லைவா ழந்தண" ரென் றடிதா னல்கத் திருவருளோ டொன்று சிவ ஞானமேவுஞ், செல்வனா ரூரனடி யாரைப் போற்றுந்; திருத்தொண்டர் தொகையதனை விரித்துப் பாட, மல்லன்மா வளமிகுகுன் றத்தூர் மல்க மாயிருஞா லம்வாழ