24முன்னுரை

சிறிதும் மாறுபடாது, கற்றோர்க்கும் மற்றோர்க்கும் பயன்படுமுறையில் அமைந்துள்ளது. மூலத்தின் முதலிறுதிகளை எடுத்துக்கொண்டு பொழிப்புத் திரட்டியும், பதசாரம் கூறியும், தேவாரம் முதலிய திருமுறைகளிலிருந்தும், கந்தபுராணம் காஞ்சிப்புராணம் முதலிய காவியங்களிலிருந்தும் பிரமாணம் காட்டிப் பொருணிச்சயம் செய்தும், இலக்கண முடிபு காட்டியும் இவ்வுரை எழுதப்பட்டிருக்கிறது. படிப்போர்க்கு நிகழும் ஐயங்கள் இவ்வுரையில் வரும் பல மேற்கோள்களினாலே நீங்குகின்றன. நூலிற் காணப்படும் சித்தாந்த சாத்திர நுட்பங்கள் நன்கு ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தல சம்பந்தமான செய்திகளும், சாசனப் பகுதிகளும், படங்களும் இவ்வுரையில் உரிய இடங்களில் இடம் பெறுகின்றன. இவ்வுரையைப் படிப்பவர்களுக்குப் பல அரிய விஷயங்கள் விளங்கும். இப்புராணத்துக்கு இதுபோன்ற உரை இதுவரை வெளிவந்திருக்கவில்லை.
     இப்பேருரையை எழுதியுபகரித்த பெரியார் யாவரெனில், பரம்பரைக் கல்வி கேள்விச் செல்வம் படைத்தவரும், சைவாசாரத்திற் சிறந்துள்ளவரும், பேரூர்ப் பட்டிப்பெருமானுக்குப் பெருந்தொண்டு பூண்டவரும், சிவபூசா நியமமுடையவரும் சிவனடியார் பக்தியில் மேம்பட்டவரும், கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்பமொழியும் வாக்குநலத்திற் சிறந்தவரும், சேக்கிழார், கருவூர்த்தேவர், பெருங்கருணை அம்மைபிள்ளைத்தமிழ் முதலிய நூல்களின் ஆசிரியரும், திருமுறை நூல்களில் மிகுந்த பயிற்சியுடையவரும், செந்தமிழ்ப் புலவரும் இன்சொல், பொறுமை, அடக்கம் முதலிய பல நற்குணங்களுமொருங்குடைய வரும், வழக்கறிஞரும் ஆகிய சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார், பி.ஏ. அவர்களாவர்.
     இச்சிறந்த பேருரையைச் சைவமக்கள் ஒவ்வொருவரும் விரும்பிப்பெற்றுப் பயனடைவார்களாக.
     பேரறிஞராகிய ஸ்ரீமத் முதலியாரவர்கள் நீண்டகாலமிருந்து, இன்னும் இவை போன்ற நூலுரைகளைச்செய்து உலகுக்கு உபகரிக்குமாறு எல்லாம் வல்ல சிவபெருமானது ஸ்ரீ பாதார விந்தங்களை மன மொழி மெய்களால் வணங்குகின்றோம்.
 
அச்சுவேலி - யாழ்ப்பாணம்
இங்ஙனம்
குமாரசாமி குருக்கள்               
 
28
வாழ்த்துப்பா
1    கற்பனை கடந்து நின்று கருணையே உருவ மாகி
அற்புத நடஞ்செய் மூர்த்தி அருட்டிரு வாக்குக் கொண்டு
சொற்பொரு ளுணர்ந்து குன்றைச் சேக்கிழார் பெருமான் தூய
பொற்பமர் காதை தொண்டர் புராணமா விரித்தான் மன்னோ.
 
2    தில்லைவாழ் மறையோர் ஏனைத் திருத்தொண்டர் அபயன் சோழன்
பல்லவர் இருந்து கேட்டுப் பண்டுநம் சைவம் செய்த
எல்லையில் தவப்பே றென்றென் றின்பவெள்ளத்தி லாழ்ந்தார்
நல்லதோர் அணியாக் கொண்டார் நற்றமிழ் அன்னைக் கன்றே.
 
3    ஆரண மென்றார் நல்ல ஆகம மென்றார் மற்று
சீரிய புராணமென்றார் சித்தாந்த மென்றார் மேலோர்
ஓரியல் பாக வன்றி உணர்வினுக் கேற்பப் பெம்மான்
பேரியல் பதனைக் கூறும் பெற்றியிற் கேட்டா ரெல்லாம்.