|
4 பத்தியாம் வலையி லெய்தும் பரமனைப் போற்றி வீட்டின் |
பத்தியே திளைத்த தொண்டர் பண்புடைக் காதை தன்னைப் |
பத்தியாக் கற்று நல்லோர் பலபல வாகக் கூறும் |
பத்தினோ டாறு பேறும் படைத்தனர் என்ப மாதோ. |
|
5 பவக்கடல் கடக்க வாய்த்த பற்றுக்கோ டாமிந் நூற்குச் |
சிவக்கவி மணியாம் கோவை சுப்பிர மணிய சீலன் |
சிவக்கலை மலர்ந்து நாறச் சிறந்தபே ருரைதான் கற்றோர் |
உவக்கவே விரித்து யாரும் உளங்கொள விரித்திட்டானே. |
|
6 அப்பொழு தரங்க மான அவ்வர சபையில் போதும் |
செப்பிய விரிவு ரைக்குச் சிறந்தநல் லரங்க மாக |
ஒப்பிலாச் சேக்கிழார்தம் உயர்மர பதனில் வந்தோன் |
மெய்ப்பொருள் விரித்தான் தில்லை மறையவர் மரபி னோர்முன். |
|
7 அருமறை வாழி தில்லை அந்தணர் வாழி தொண்டர் |
பெருமைசேர் புராணம் வாழி பேருரை வாழி சைவ |
ஒருமைநன் நெறியும் வாழி ஓதினோர் கேட்டோர் யாரும் |
இருமையும் பெற்று வாழி எழிலிகள் பெய்து வாழி. |
| இங்ஙனம் | தில்லைத் திருமுறைக் கழகத்தார் | | | |
29 |
ம - ள - ள - ஸ்ரீ சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களுக்கு உபயக்ஷேமம். |
தாங்கள் நீண்டகால அருமையான உழைப்பினால் ஏற்பட்ட ஓர் உன்னதகாரியமாகிய "பெரிய புராண விரிவுரை எழுத்து நிறைவு விழா" சிதம்பரத்தில் நடத்துவதாய்த் தெரிய மிகவும் சந்தோஷப்பட்டேன். அவ்விடத்திய ஆயிரக்கால் மண்டபத்தில் நடைபெறும் சமயம் அவ்விடமிருந்தால் எவ்வளவு மன மகிழ்ச்சி ஆனந்தம் உண்டாகும் என்று நினைத்துக்கொள்ளத்தான் முடிகிறது. திருவருட்கிருபையால் விழா இனிமையுடனும் விமரிசையுடனும் நடைபெறுமாகவும். இவ்வித சேவையில் தாங்கள் மென்மேலும் ஈடுபடவும் சுகம் நீண்டகால வாழ்க்கையும் பெறப் பிரார்த்திக்கிறேன். |
அன்புள்ள |
வி. சி. வெள்ளியங்கிரி கவுண்டர் |
30 |
சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார் அவர்கள் திவ்விய சமூகத்திற்கு, அடியேன் வணக்கம். |
தங்களன்பான கடித அட்டை கிடைக்கப்பெற்றுச் சிற்பரனின் திருவடியைச் சிந்தையிலே வைத்துச் செப்பரியவானந்தம் திளைக்கின்றவரின் இன்ப நிலையை அடியேனும் பெற்றேன். தாங்கள் எடுத்துக்கொண்ட இந்தச் சிவத்தொண்டு தங்கள் தவத்தின் பெருமைக்கோர் அறிகுறியாகத் தமிழ்மொழி வழங்கும் நிலத்தில் நீடூழி வாழ்ந்திருக்கும், மனம் அதிக மகிழ்ச்சியடைந்ததால் என்ன எழுதலாம்; என்று கூடத்தெரியவில்லை - கைம்மாறாகத் தங்களுக்கு நாம் செய்வதொன்றில்லை - |