|
நிலைநீங்கி யோருருவின் வந்துதம துள்ளம் |
நினைந்தவா புரியவரு ணெறிபிடித்த வடியார் |
குலமுரிய பெருமையெலா மளப்பரிதே யவற்றைக் |
கூறவல்லார் சேக்கிழா ரன்றியிலர் பிறரே. |
|
2 தெய்வமணங் கமழ்வது சிவாநந்தச் செழுந்தேன் |
தெவிட்டாது பொழிவதுண்மை தெரிந்தவருக் கிகத்தே |
மெய்வகைய கரணமெலா மழன்மெழுகா யுருகு |
வித்தழிவில் பேரின்ப விடளிக்குந் தகைத்துச் |
செய்வினைகள் பிறவெனினு நல்வினையே யாகச் |
செய்யுமன்பி னுருவமுறு சித்திரங்காட் டுவது |
கைவரநந் தமிழ்நோற்ற நற்றவத்தாற் றோன்றும் |
காட்சியதாந் திருத்தொண்டர் புராணமென்ப கற்றோர். |
|
3 இந்நூற்குப் பலரெழுது முரை யறிவோ மவற்று |
ளேற்ற விரிவுரை யிதுவேபோன் றில்லையென வியப்ப |
முன்னூலு மேனையவாந் திருமுறைமேற் கோளு |
மொழிசைவப் பொருளின்வரு நுட்பமெலாம் பொருந்தப் |
பன்னூலு மிலக்கணமு மமையவிளக் கியவப் |
பான்மையோன் புகழறிந்த படியுரைப்பா மன்றே |
தொன்னூலின் பொருட்கடலும் சிவஞான போதத் |
துறைக்கடலும் கடந்தரனார் திருவடிக்கன் பின்னே. |
|
4 பூமடந்தை கொங்கைமுகட் டிலகுமணிக் கோவை |
போன்றுகொங்கை யணியுறுத்துங் கோவைநகர்ப்பதியோன் |
நாமடந்தை பணிகேட்குஞ் சேக்கிழார் மரபோன் |
நற்றமிழின் சுவைபிறர்க்கு நல்கிடுஞ்சீர்ப் புலவன் |
கோமகனா கியகந்த சாமிப்பேர்ச் சைவக் |
குலதிலகன் றவமனைத்துந் திரண்டுருவாம் தோன்றல் |
நேமமிகுஞ் சிவனடிக்கே மனமளித்தன் பிணையே |
நேர்வேண்டுஞ் சுப்ரமண்ய நேயனைவாழ்த் துதுமே. |
|
5 தவஞ்செய்த தவமோநற் றமிழ்செய்தவப் பேறோ |
சைவந்தான் பன்னெடுநாட் புரிதவங்கா ரணமோ |
நவவடிவ னாட்டயருந் திருத்தில்லை யரங்கில் |
நன்குமுதற் றொடங்கிமுற்று வித்துமற்று மாங்கே |
கவிஞர்குழாம் புகழ்ந்தேத்த அன்பர்கரங் குவிப்பக் |
கண்டோர்க ளுளங்கரைந்து கண்ணீராய்ப் பெருகச் |
சிவமாரும் கவிமணியைப் பணிகொண்டான் எங்கள் |
செல்வன் பொற் புகழ்வேட்கை யாவரிடத் துளதே. |
|
வெண்பா |
தன்பேர்கொள் சேக்கிழார் தம்மாலிந் நூலாக்கிப் |
பின்போ ரரியவுரை பேசுமா - அன்பாற்றன் |