திருத்தொண்டர் புராணமும் - உரையும்31

தம்பிரான் முதலியவர்கள் கருத்துக்களுக்கு உட்பட்டும் வெகு சிறப்பாக இப்பேருரை எழுதப்பட்டுள்ளது. மிகக் கடினமான காலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்தப் பேருரை இதுவரையில் தமிழ் நாட்டில் வந்ததில்லை.
     விரிவுரை நிறைவு விழா:- பதினான்கு ஆண்டுகளாக எழுதிவந்த உரை தனது 70-வது ஆணடில் சிதம்பரத்தில் ஆயிரக்கால் மண்டபத்தில் வெகு சிறப்போடு நிறைவு படுத்தினார். நிறைவுவிழா - 12 - 7 - 48ல் ஆனி உத்திர தரிசன நன்னாளின் நடராசப்பெருமான் சந்நிதியில் தொடங்கியது. அடுத்த நாள் பொதுக் கூட்டத்தில் அரங்கேற்றம் நடந்தது. பல அன்பர்கள் பேருரையைச் சிறப்பித்துப் பேசினார்கள். வெள்ளானைச் சருக்கத்து இறுதிப் பாடல்கள் (1267-4281) தனிப் பிரதியாக வெளியிடப்பட்டன. சைவசித்தாந்த சமாஜத்தார், சைவ சமய பக்தஜன சபையார், சென்னைச் சிவனடியார் திருக்கூட்டத்தார், யாழ்ப்பாணம் சைவப் பரிபாலன சபையார் முதலிய பல சங்கங்களும் பாராட்டுரைகளை அளித்தார்கள். பல அன்பர்கள் வாழ்த்துப்பாக்களை படித்தும் அனுப்பியும் வைத்தார்கள். தருமபுரத்துச் சன்னிதானம் முதலிய பல மடங்களும் ஆதரவு அளித்தார்கள். தருமபுரத்துச சன்னிதானம் முதலிய பல மடங்களும் ஆதரவ அளித்தார்கள். இந்த வகையில் பெரியபுராணப் பேருரை நிறைவுவிழா நடைபெற்றது. இதனால் தமிழ்நாடு சைவ மக்களும் பலனடைந்து முன்னேறுவார்களாக. - சித்தாந்தம்.
10-8-48
 
 
C. M. இராமச்சந்திரஞ் செட்டியார்,
கோவை
35
     நமது குருபுத்திரசிகாமணியாகிய மகா வித்துவான் சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களுக்குச் சிவஞானமும் தீர்க்காயுளும் சிஞ்சித மனோரத சித்தியும் அபிவிருத்தியாகுக.
     உலகியல் மக்களைப் பக்திவலையில் அகப்படுத்த அவதரித்த அறுபத்திமூன்று நாயன்மார்க.ள் சரித்திரத்தைப் பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பகர்ந்தருளிய சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்தைக் கற்றோரின்றி மற்றோரும் எளிதில் உணர்ந்துகொள்ளுமாறு பேருரை செய்துமுடித்து, முன்னோர் நடராசப்பெருமான் திருவடியில் சமர்ப்பித்தபடி, அவர் வழிவந்த தாங்களும் சமர்ப்பிக்கும் இவ்வுத்தரத் திருநாளில் அநபாய மன்னன்போல் நேரில் வந்திருந்து உபசரிகக இயலாமைக்கு வருந்துகிறோம். பக்தியில் திளைத்த தங்கள் உள்ளம் பக்திப்பெருநூலாகிய பெரிய புராணத்தில் ஒன்றி உரையெலாம் பக்தி மணக்கச் செய்தது அம்பலத்தாடும் அவனருளே. மூல ஆசிரியர்பிரான் நூலும்பேரும் உலகில் நிலவுமளவும் உரையாசிரியராகிய தங்கள் உரையும் புகழும் நிற்குமென்ப துறுதி.
 
"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
 என்னாற்றும் கொல்லோ உலகு!"
 
என்ற வள்ளுவப் பெருந்தகையாரின் வாக்குப்படி, தாங்கள் உலகுக்களித்த இப்பெரும் பக்திச் செல்வத்திற்கு உலகத்தார் செய்யும் கைம்மாறு தங்கள் உரையைக் கற்று ஆனந்திப்பதன்றி வேறொன்றில்லை.
     "பல்லாண்டு என்னும் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே" என்றமுறை பற்றி முதல்வன் அருள்பெற்ற பொய்யடிமையில்லாப் புலவராகிய தங்களுக்கு நாம் மனமுவந்து அனுப்பும் ஆசியும் அத்தன்மைத்தே.