|
மதிப்புரை |
தூத்துக்குடிச் "சித்தாந்தப் பேராசிரியர்" "சைவசித்தாந்த" திரு. ந. சிவகுருநாத பிள்ளை அவர்கள் மனமுவந்தெழுதிய ஆசியுரை :- |
உயர் சைவத் திரு. "சிவக்கவிமணி" |
| C. K. சுப்பிரமணிய முதலியாரவர்கள், B. A., கோவை. |
வணக்கம். தங்கள் தவ உடலின் பாங்கறியும் ஆவலுடையேன். தாங்கள் அடியேனது 75-ஆம் ஆண்டுப் பிறந்தநாட் பரிசாகப் பெரிய புராண விருத்தி உரையின் மூன்றாம் பகுதி இரண்டாம் பாகமும், எமது ஆண்டவன் திருஞான சம்பந்தப் பெருமான் புராணம் 1 - 100 வரையுள்ள பாடல்கள் அடங்கிய பகுதியும் அனுப்பியருளினமைக்குப் பெரிதும் நன்றி செலுத்துகின்றேன். கண்ணைக் கவரும் பதிப்பின் அழகும், கருத்தைக் கவரும் உரையின்நலமும் பொருந்திய பெரிய புராணத்தைப் பெரியீராகிய தாங்களேயன்றி வேறு எவர் அளித்தற்குரியார்! |
தாங்கள் மேற்கொண்டுள்ள அரும்பெரும் தொண்டு விரைவில் இனிது நிறைவேறும் வண்ணம் தங்கட்கு எல்லா நலன்களையும் அளித்தருளப் பொன்னம்பல வாணன் இன்னடிகளை ஏத்துகின்றேன். |
| |
| செயற்கரிய செயல்செய்து சிவனடிக்கே யாளாகி |
| உயர்ச்சிபெறும் அடியவர்தம் உண்மைபுகல் புராணத்தை |
| அயற்சமயி களுங்கற்றே அன்புநிலை புரிந்திடற்காம் |
| மயற்சியறு முரைவிரிக்குஞ் சுபபிரமண்யன் வாழ்கவரோ. |
| அன்பன் |
| ந. சிவகுருநாதன் |
| 37 |
| சிவ முருகா |
| வாழ்த்துப்பா |
| கண்டி - (இலங்கை) - 31 - 11 - 47 |
கண்டி அன்பர் திரு. க. வேலுபிள்ளை அவர்கள் அன்புடன் அனுப்பியது. |
| |
| ஐயா! முருகா! வயில்வேல் கரத்தேந்துஞ் |
| செய்யா! கதிரைமலைச செவ்வேளே! - தெய்வக் |
| கவிக்குரைசெய் சைவக் கவிமணிக்குன் னாசி |
| நிதிக்குவையோ டீவாய் நிதம். |