|
முன்சேர்க்கை - 1 |
சிவமயம் |
பெயர் விளக்கம் |
எண்கள் - பாட்டு எண்கள் |
அயவந்தி - 2359. திருச்சாத்த மங்கையில் இறைவர் எழுந்தருளிய கோயிலின் பெயர். |
அருக்கன் - 1920. சூரியன் - நவகோள்களுள் ஒன்று. |
ஆதிரை நாள் - 1920 = 2393 நாள் மீன்கள் 27ல் ஒன்று. சிவனுக்குகந்தநாள். |
ஒரு நாமத்தஞ்செழுத்து - 2518. சிவனாமமாகிய சீபஞ்சாக்கரத் திருமந்திரம். |
கடையுகம் - 1956. கலியுகம்; நான்கு யுகங்களுள் இறுதியில் உள்ளது. |
கணபதீச்சரம் - 2367. திருச்செங்காட்டங் குடியில் இறைவர் எழுந்தருளியுள்ள கோயிலின் பெயர். கணபதி வழிபட்ட பதி. |
கலயர் - 2431. குங்கலியக்கலய நாயனார். திருக்கடவூரிறைவர் பெயர் சூட்டி வழங்கப் பெற்றவர். |
கவுணிய கோத்திரம் - 1913. குலம் 1926. ஆளுடைய பிள்ளையார் அவதரித்த குலமரபு; குடி என்பர். |
கழுமலம் - 1900 - 1998. சீகாழியின் 12 பெயர்களுள் 12வது பெயர். அடைந்தாரது மலங்களைப் போக்கித் தூய்மை செய்வது. |
கன்னிநாடு - 2512. பாண்டிநாடு. |
காவிரி - 1999. பொன்னி 2020. பெருந் தீர்த்தநதிகளுள் ஒன்று. |
குலச்சிறையார் - 2502. நின்றசீர்நெடுமாறனாரது மந்திரியார். |
கொங்கிற் குடபுலம் - 2221. மேல் கொங்கு நாடு. |
கொல்லிமழவன் - 2209. ஆளுடைய பிள்ளையாரால் முயலகனோய் தீர்த்தருளப்பட்ட பெண்ணின் தந்தை; மேல் மழநாட்டை ஆண்ட சிற்றரசன். |
கொள்ளிடத்திருநதி - 2043 - 2044. காவிரியின் வடிகாலாய்ப் பெருநதியாகச் சோழர்களால் வெட்டப்பட்டுக் கடலிற் கலப்பது. |
கோச்செங்கண் அரசன் - 2243 - 2430. கோச்செங்கட்சோழர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். சிவனுக்கு 78 மாடக்கோயில்கள் எடுப்பித்தவர். புராணம் பார்க்க. |
சண்பை - 1931 - 1995 - 2003 - 2007 - 2009 - 2029. சீகாழியின் 12 பெயர்களுள் 9வது பெயர். |
சிரபுரம் - 2040 - சீகாழியின் 12 பெயர்களுள் 7வது பெயர். |
சிவபாத விருதயர் - 1913 - 1916 - 1970. ஆளுடைய பிள்ளையாரின் தந்தையார். |
சிவபெருமான் - 1965. |