34முன்னுரை

     திருத்தொண்டர் - 2366. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்; புராணம் பார்க்க.
     ஞாயிறு - 2282. முருகப் பெருமான்.
     தனிமுதற் குழவி - 1939. முருகப் பெருமான்.
     தில்லைவாழந்தணர் - 2052 - 2060 - 2068 - 2069. தில்லை மூவாயிரவர்; நடராசருக்கு அகம்படித் தொண்டு பூண்டு உரிமைப் பணிபுரிவோர்; தில்லை நான் மறையோர் 2072.
     திருநாவுக்கரையர் - 2166. திருநாவுக்கரசு நாயனார்.
     திரு அணுக்கன் திருவாயில் - 2057. தில்லையம்பலத்தில் நடராசருக்கு அணுக்கமாக உள்ள திருவாயில்.
     திரு அரத்துறை - நெல்வாயி லரத்துறை எனப்படும். ஆளுடைய பிள்ளையாருக்கு முத்துச்சிவிகை முதலியன அருளிய பதி.
     திரு எருக்கத்தம் புலியூர் - 2076. நடு நாட்டுப் பதிகளுள் ஒன்று. தல விசேடம் lV - 212
     திரு எல்லை - 2045. தில்லைப்பதியினின்றும் காததூரத்தில் நாற் புறமும் உள்ள அமைப்பு.
     திருக்களிற்றுப் படி - 2071. தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் ஐந்து படிகள்; களிற்றுக்கை போன்ற அமைபபு இருபுறமும் உள்ள காரணத்தாற் போந்த பெயர்.
     திருக்கயிலை - 2244. இறைவரது திருமலை.
     திருக்கருவூர் ஆனிலை - 2237. கருவூர் - கொங்கு நாட்டுப் பதிகளுள் ஒன்று. ஆனிலை - திருக்கோயிலின் பெயர்.
     திருக்கொடிமாடச் செங்குன்றூர் - 2222. கொங்கு நாட்டுப் பதிகளுள் ஒன்று. திருச்செங்கோடு என வழங்குவது.
     திருத்தூங்கானை மாடம் - 2082. திருப் பெண்ணாகடத்தின் கோயில்.
     திருத்தோணி - 1997 - 2041. சீகாழியில் தோணியப்பர் எழுந்தருளியிருக்கும் தோணிவடிவாகிய சிகரக்கோயில். கோயிலினுள் மலை என வழங்குவர்.
     திருநணா - 2225. பவானி என வழங்கும். கொங்கு நாட்டுப்பதிகளுள் ஒன்று.
     திருநீலகண்டப் பெரும்பாணர் - 2029 - 2042 - 2075. 63 நாயன்மார்களுள் ஒருவர்.
     திருநீல நக்கர்- 2358 திருநீலகண்டம்-2233.இறைவரது கழுத்து;கரிய விடந்தங்கியதால் காரணப் பெயர் பெற்ற
     திருநெல் வெண்ணெய் - 2127. நடு நாட்டுப்பதிகளுள் ஒன்று.
     திருப்பள்ளி எழுச்சி - 2093. இறைவரது வழிபாட்டுக்குரிய முதற்காலம்.
     திருப்பாண்டிக் கொடுமுடி - 2235. மயேந்திரமாமலை; இங்கே சிவபெருமான் ஆகமங்களை வெளிப்படுத்தியருளினார். "மன்னு மாமலை மகேந்திர மதனிற், சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்" (திருவாசகம் - கீர்த்தி),
     திருமுதுகுன்றம் - 2078, நடுநாட்டுப் பதி; நம்பிகள் 12000 - பொன் பெற்றபதி.