திருத்தொண்டர் புராணமும் - உரையும்35

     துணைப்புண ரோரை - 2282 - மிதுனராசி.
     தூங்கானை மாடம் - 2082. திருப்பெண்ணாகடத்தில் இறைவர் எழுந்தருளியிருக்கும் கோயிலின் பெயர்.
     தென்னவன் -2498. பாண்டியன்.
     தோணிபுரம் - 2004; சீகாழியின் 12 பெயர்களுள் 5-வது பெயர்.
     நந்தியெம் பெருமான் - 2057. திருநந்தி தேவர். சிவபெருமானால் சிவாகமங்களை உபதேசிக்கப்பெற்ற முதல மாணாக்கர்.
     நாமகள் - 1952. கலைவாணி - சரசுவதி.
     நிவாநதி - 1074. தில்லையின் வடக்கிலுள்ள நதி. திருமணிமுத்தாறுடன் கூடிச்சென்று பறங்கிப் பேட்டையருகு கடலிற் கூடுவது. தேவாரங்களுட் போற்றப் பட்டது.
     பகவதியார் -1914.ஆளுடைய பிள்ளையாரை ஈன்ற தாயார்
     பாண்டிமாதேவி -2501. மங்கையர்க்கரசியம்மையார். மானியார்.
     பிரமபுரம் -2511; 1912 - சீகாழியின் 12 பெயர்களுள் முதலாவது பெயர். இப்பாட்டில் அந்தப் பன்னிரு பெயர்களும் காலவரிசையிற் கூறப்பட்டுள்ளன. இவ்வரிசை ஆளுடைய பிள்ளையாரால் காட்டியருளப்பட்டது.
     புகலி -2328 - 2042 - சீகாழியின் 12 பெயர்களுள் 3-வது பெயர்.
     புகார் -2020. காவிரிப்பூம்பட்டினம்; திருச்சாய்க்காடு இதனுடன் சேர்த்துச் சொல்லப்பெறும்.
     புற்றிடங் கொண்டார் - 2390. திருவாரூர்த் திருமூலட்டான நாதர்.
     பூந்தராய் - 2007. சீகாழியின் 12 பெயர்களுள் 6வது பெயர்.
     பூழியர் - 2500. பாண்டியர்.
     பேரம்பலம் - 2071. தில்லைக் கோயிலினுள் 5 அம்பலங்களுள் திருச்சிற்றம் பலத்தினை அடுத்துக் கிழக்கில் உள்ள பெருமன்றம்.
     மதங்க சூளாமனியார் - 2029 - 2075. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின் தேவியார். இவரும் பாடல் வல்லவர். "மன்னுமிசை வடிவான மதங்க சூளாமணியார்.
     மதுரை - 2529. பாண்டி நாட்டுப்பதி. தலைநகர்.
     மந்தரம் - 1902. மேருமலை.
     மாமாத்திரர் - 2369. சிறுத்தொண்ட நாயனாரது மரபு (குலம்).
     மாறன்பாடி - 2089. திருப்பெண்ணாகடத்திலிருந்து திருவரத்துறைக்குச் செல்லும்போது வழியில் இரவில் ஆளுடைய பிள்ளையார் தங்கிய பதி. திருவரத்துறை இறைவர் தந்தருளிய முத்துச்சிவிகை - குடை - காளம் - சின்னம் இவற்றை அவராணைப்படி அடியார்கள் ஏந்தி இங்குக் கொணர்ந்து அளித்தனர்.
     முக்குளம் - 2024. திருவெண்காட்டுக் கோயிலினுள் உள்ள சோம சூரிய அக்கினி என்ற மூன்று தீர்த்தக் குளங்கள். தேவாரத்தினுட் போற்றப்பட்டன.
     முருக நாயனார் - 2387; 63 நாயன்மார்களுள் ஒருவர்.
     வாலியார் - 2196. இராமாயணத்தில் வரும் பாத்திரங்களுள் ஒருவர். சிவனை வழிபட்டுப் பெருவரங்கள் பெற்ற பேரன்பர். சுக்கிரீவனின் தமையன்.