நாளது ஆனி மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை காலையில் 9 மணிக்கு மேற்படி உரைச் சுவடிகள் அச்சிட்ட பகுதிகளையும், இனி அச்சிட எஞ்சிய கைஎழுத்துச் சுவடிகளையும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் தெரு உலகமூர்த்தி தேசிகர் மடத்தில் செம்பொற்றாம்பாளத்தில் எழுந்தருளச் செய்து, செம்பட்டும் பச்சைப்பட்டும் சாத்திப் பூமாலை சூட்டி, அலங்கரித்துப் பல அன்பர்கள் தாங்கி வரவும், முனிவர் கூட்டமும் அடியார் கூட்டமும் சூழ்ந்து வரவும், தேவார பாராயணத்துடன் திருவீதி எழுந்தருளச் செய்து முக்குறுணி விநாயகர் கோயிலிலும், கற்பக விநாயகர் கோயிலிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. அதன் பின்னர்த் தேவார பாராயணத்துடன் ஸ்ரீ சபாநாயகர் திருக்கோயிலினுள் திருமாளிகைவலமாக ஆயிரக்கான் மண்டபம் என்னும் இராசசபையின் சிங்காசனத்தில் ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேதராக ஸ்ரீ நடேசப் பெருமான் மகா சௌந்தரியாலங்கார முடையராய்க் கொலு வீற்றிருக்கும் இடத்தில் மேற்படி அடியார் கூட்டத்துடன் தேவார முழக்கும் அரகரமுழக்கும் சூழத் திருவம்பலமுடையார் திருவடிக்கீழ் எழுந்தருளச் செய்யப்பெற்று, அருச்சனை ஆராதனைகள் விதிப்படித் தில்லைவாழந்தணர்களால் செய்யப்பட்டன. பின்னர் மேற்படி உரைச் சுவடிகளை அலங்கரித்தவாறே அம்பிகையின் மஞ்சத்தில் வைத்து உரையாசிரியருக்கு ஸ்ரீ நடராசர் திருமுன்பு மாலை சூட்டி மகதைசுவரியமாகிய திருவடி நீறு முதலிய பிரசாதங்கள் வழங்கப் பெற்றுத் தில்லை வாழந்தணர்களால் நித்தியானந்த வைபவமாகிய ஆசீர்வாதங்களும் வழங்கப்பெற்றுத் திருக்கூட்டத்துடன் நின்ற அனைவருக்கும திருவருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன்பின் முன் வந்தவாறே தேவார பாராயணத்துடன் உரைச் சுவடிகளை மேற்படி உலக மூர்த்தி தேசிகர் திருமடத்துக்கு எழுந்தருளுவித்தனர். அதன்பின் அனைவரும் ஸ்ரீ நடராசருடைய அருட்பெருந் திருக்கூத்தினை ஆரா வகைதொழு தானந்தித்தனர். திருக்கூட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் திருக்கழிப்பாலை சி. ப. தேவாரபாடசாலையின் அதிபர் திரு. பழனியப்ப முதலியார் அவர்களால் மாகேசுர பூசை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. |
மறுநாள் மாலை 5 மணிக்கு மேற்படி ஆயிரக்கான் மண்டபத்தில் பாராட்டுக் கூட்டம் நிகழ்ந்தது. மேற்படி கூட்டம் ஸ்ரீ சபாநாயகர் கோயில் பொது தீட்சிதர்களாலே விளம்பரப்படுத்திக் கூட்டப்பட்டது. தில்லைவாழந்தணர்களும், மடாதிபதித்தலைவர்களின் பிரதிநிதிகளாகிய முனிவர்களும், புலவர் பெருமக்களும், பெண்மணிகள் பலரும், அன்பர் கூட்டமுமாகத் திரண்டு கூடினர். கூட்டத்திற்குத் தில்லை |