|
திருக்கூட்டத்தாருமாகக் கூடிக் கொண்டாடி வர நேர்ந்தது. எனவே திருவஞ்சைக்களத்தப்பரையும், அங்குச் சுந்தரமூர்த்தி நாயனாரையும் சேரமானாரையும் வழிபட்ட நலத்தின் துணையாலே வெள்ளானைச் சருக்கத்தில் அத்தல நிகழ்ச்சியுடன் நிறைவாகிற இப்புராண உரையும் நிறைவாயிற்று என்பது திருவருள் கூட்டிக்காட்ட அறியவருகிற செய்தியாகும். |
உரை நிறைவு விழாவிற் படித்தளித்த பாராட்டுரைகளும் கடிதங்களுமாகியவற்றின் பகுதிகள் அடுத்த சஞ்சிகையில் வெளியிடப்பெறும். |
இனி, 1935ம் ஆண்டில் தில்லையில் முதற்சஞ்சிகை அரங்கேறிய மூன்றாம் நாள் திருவாரூரில் ஸ்ரீ தியாகேசரை வழிபட்டு, அந்தச் சுவடியை அவரது திருவடியிற் சார்த்தி வணங்கப் பெற்றவாறே, ஈண்டும் புராண உரை நிறைவு விழாவினை அடுத்தும் மூன்றாம் நாள் திருவாரூரில் ஸ்ரீ தியாகேசரது தட்சிணாயனத் தொடக்க மகாபிடேக தரிசனமும் வழிபாடும் கிடைக்கப் பெற்றது திருவருட் பொருத்தமாகும். |
இனி, அதன்மேல் ஆடிச்சுவாதியில் 11-8-1948 தேதி திருவஞ்சைக்களத்தில் வழிபாட்டுடன் புராண உரை நிறைவு விழாப் பூர்த்தியாயினமை திருவருட் சம்மதமாகிய நிகழ்ச்சியாகும். |
கோயம்புத்தூர் சேக்கிழார் நிலையம்} | 12-08-1948 | | அடியேன் | C. K. C. K. சுப்பிரமணிய முதலியார் | உரைஆசிரியன் | | |