8முன்னுரை

திருச்சிற்றம்பலம்
பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராண உரை நிறைவு
வழிபாட்டு விழா
 
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
- பெரிய புராணம்
பூங்கமலத் தயனுமலர்ப் புண்டரிகக் கண்ணானும்
தாங்குபல புவனமுமேற் சகலமுமா யகலாத
வோங்குமொளி வெளியேநின் றுலகுதொழ நடமாடுந்
தேங்கமழும் பொழிற்றில்லைத் திருச்சிற்றம் பலம்போற்றி.
 
நாவிரவு மறையினராய் நாமிவரி லொருவரெனுந்
தேவர்கடே வனசெல்வச் செல்வர்களாய்த் திகழ்வேள்வி
பாவுநெறி பலசெய்யும் பான்மையராய் மேன்மையரா
மூவுலகுந் தொழுமூவா யிரமுனிவ ரடிபோற்றி
- கோயிற்புராணம்
     சிவநெறிச் செல்வர்களே! ஸ்ரீ நடேசப் பெருமான் "உலகெலாம்" என அடி எடுத்துக் கொடுக்கச் சேக்கிழார்பெருமான் பாடியருளிய அநபாயச் சக்கரவர்த்தியாருடைய வேண்டுகோளின்படி ஸ்ரீ சபாநாயகர் திருமுன் அவ்வரசருடைய அரசவையில் அரங்கேற்றிய பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்துக்குக் கோவன்புத்தூர், வழக்கறிஞர், சிவக்கவிமணி, ஸ்ரீமான் சி. கே. சுப்பிரமணிய முதலியார், பி. ஏ. அவர்கள் எழுதி வெளியிட்டுவருகின்ற விரிவுரை நிறைவுபற்றிய வழிபாடு நிகழும் சர்வதாரி வருடம் ஆனி மாதம் 29 ஆம் தேதி (12-7-48) சோமவாரத்தில், ஆனி உத்தர தரிசன நன்னாளில் நடைபெறும். அடுத்தநாள் ஆனி மாதம் 30 ஆம் தேதி (13-7-48) நிகழ்ச்சிமுறையில் குறிப்பிட்டபடி ஒரு பொதுக்கூட்டம் சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்தில் நடைபெறும். அன்பர்கள் வழிபாட்டில் கலந்துகொண்டும், பொதுக்கூட்டத்தைச் சிறப்பித்துச் சொற்பொழிவுகளைக் கேட்டும் ஸ்ரீ சபாநாயகருடைய திருவருளைப்பெற்று வாழும்படி ஞாபகஞ் செய்கிறோம்.
இங்ஙனம்
பொது தீக்ஷிதர்கள்
நிகழ்ச்சி முறை
     சர்வதாரி வருடம் ஆனி மாதம் 29 ஆம் தேதி (12-7-48) திங்கட்கிழமை காலை 9 மணியளவில் :- உரைச்சுவடிகளை ஆயிரக்கால் மண்டபத்தில் இறைவன் திருவடியிற் சார்த்திவழிபடுதல்.
     13-7-48 மாலை 4 மணி :- மேற்படி இடத்தில் பொதுக்கூட்டம். அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.