திருத்தொண்டர் புராணமும் - உரையும்9

கடிதங்களும் வாழ்த்துக்களும்
1.
அன்பார்ந்த பெரியாருக்கு,
     தங்களன்புள்ள கடிதம் கிடைத்தது; வந்தனம். தங்கள் பெரியபுராணப் பணிபற்றிக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இவ்வுயர்ந்த பணி நிறைவேறிய வழிபாட்டில் நான் தலைமைதாங்கக்கூடிய பெருங் கவுர்வத்தை எனக்கு அளிக்கத் தாங்கள் நினைத்ததற்கு என்மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளச் சக்தியற்றவனாயிருக்கிறேன். ஜூலை மாதத்தில் நான் இதுவரையில் ஒப்புக்கொண்டிருக்கிற அலுவல்களுடன், புதிதாக வெளியூர் போவது சாத்தியமில்லாமலிருக்கிறது. சென்னையிலோ, சேக்கிழார் பிறந்த குன்றத்தூரிலோ வென்னால் என்றால் கூடும். ஆனால், தங்கள் உத்தேசப்படி சிதம்பரத்தில் வைத்துக்கொள்வது மிகப் பொருத்தம். நான் கலந்துகொள்ளமுடியாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். விழா இனிது நடைபெறப் பிரார்த்திக்கிறேன்.
"மோகனா", அடையாறு
7-6-48
இப்படிக்கு
எம். பக்தவத்ஸலம்          
P. W. D. மந்திரி.
2.
அன்புடையீர்,
     தங்கள் 30-ம் தேதிக் கடிதம் கிடைத்தது. நான் 9-ம் தேதி டில்லி சென்று 15-ம் தேதிதான் திரும்புகிறேன். ஆதலால் 13-ம் தேதி தில்லைக்குவர இயலாதது பற்றித் தயவுசெய்து மன்னிப்பீர்கள். ஆண்டவனருளால் விழா நன்றாக நடைபெற வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
 
 
தங்கள் அன்புள்ள
அவினாசிலிங்கம்,               
கல்வி மந்திரி, சென்னை.
3.
Dear Sir,
     "I received your two letters. I am very glad to hear that you are having a function at Chidambaram on 13-7-48 in connection with the completion of your Periapuranam work. I wish the function all success. As regards the permission that you require from the temple authorities at Chidambaram for having the celebration in the 1000 pillared mantapam. I am writing to them today. I could not reply to you earlier as I was on camp and returned to Madras only on the 3rd.
Madras
5-7-48
yours Sincerely,
T. M. Chinnialya Pillai, M.A., B.L.,
President, Hindu Religious Endowments Board.