மேகங்கள் நாணும்.
கலைகளின் மாட்சிமையைக் கண்டு நாவுகள் நாணும்.
நகரிலுள்ள நிறைந்த செல்வங்களைக் கண்டு ஆசைகள் நாணும். நலம்
யாவற்றிலும் குறையாது வளர்ந்துள்ள நகரத்தைக் கண்டு வானகத்து
இடங்களெல்லாம் நாணும்.
இப்பாடலில்
'நாணுப' என்று வரும் இடமெல்லாம் 'நாணுவ' என்ற
சொல்லாட்சியே இயல்பானதென்று அறிக.
70 |
நளிர்பூவிடை
மதுநேர்முக நவியேயிடை விழிநே
ரொளிர்பூணிடை மணிநேருட லுருவேயிடை யுயிர்நேர்
குளிர்நாடிடை புனனேரற வழயேயிடை குருநேர்
மிளிரூரிடை யரசாகையில் மிடைகோவியல் பகர்வாம். |
|
நளிர்
பூ இடை மது நேர், முக நவியே இடை விழி நேர்,
ஒளிர் பூண் இடை மணி நேர், உடல் உருவே கிடை உயிர் நேர்,
குளிர் நாடு இடை புனல் நேர், அற வழியே இடை குரு நேர்
மிளிர் ஊர் இடை அரசு ஆகையில், மிடை கோ இயல் பகர்வோம். |
விளங்கும்
ஒரு நகரத்தில் அரசு என்பது, குளிர்ச்சி பொருந்திய
பூவில் தேனுக்கு நிகரும், முக அழகினிடையே கண்ணுக்கு நிகரும், ஒளிரும்
அணிகலனில் மணிக்கு நிகரும், உடல் உருவத்தினிடையே உயிருக்கு நிகரும்,
குளிர்ந்த நாட்டில் ஆற்றுக்கு நிகரும், அற நெறிக்கு இடையில் குருவுக்கு
நிகரும் ஆகும். ஆகையால், அந் நகரத்துப் பொருந்திய அரசனின் இயல்பை
இனிச் சொல்வோம்.
''ஆறில்லா
ஊருக்கு அழகு பாழ்'', என்பதுபோல், பூ முதலியவற்றிற்குத்
தேன் முதலியன சிறப்பாக அமையாவிடத்து அவை பாழாவதுபோல்,
அரசன் சிறப்பாக அமையாவிடின், நகரமும் அதனோடு சேர்ந்து நாடும்
நலம் இழக்கும் என்பது கருத்து. நவி - 'நவ்வி' என்பதன் இடைக்குறை.
நகரப்
படலம் முற்றும்.
ஆகப்
படலம் 2க்குப் பாடல் 166 |