பக்கம் எண் :

முதற் காண்டம்105

மொய் முனர் பின்று இலா முரண் கொடு ஏறு எனா,
மெய் முனர் பொய் எனா வெருவு ஒன்னார் இவன்
கை முனர் நிற்கு இலா கலங்கிப் போற்றும், போர்
செய் முனர் செயம் செயும் சிங்க வாகையான்.

     போர் முகத்தில் பின்னிடுதல் இல்லாத வலிமை கொண்டு ஆண்
சிங்கம் போல் தோன்றி, உண்மையின் முன் பொய் நிலை
கொள்ளாமைபோல் அஞ்சும் பகைவர் இவன் கை வன்மைக்குமுன் நிற்க
இயலாது கலங்கித் துதிக்கும் வகையில் போர் செய்வதற்கு முன்னரே
வெற்றிகொள்ளும் சிங்கம் தீட்டிய வெற்றிக் கொடியை உடையவன்.

     'ஏறு' என்ற விலங்கின ஆண் பொதுப் பெயர் சிறப்பாக ஆண்
சிங்கத்தைக் குறிக்கும். வாகை - வெற்றி. அது வெற்றியுள்ள கொடிக்கு
ஆகுபெயர். 'கை' கைவன்மைக்கு ஆகுபெயர்.
  
                   5
வேல்செயும் போரினால் வெலப்ப டான்றனைச்
சால்செயும் தவத்தினால் வென்ற தன்மையான்
சேல்செயும் புணரிசூழ் செகத்தி னின்றொளி
மேல்செயும் வானவர் விழைந்த பான்மையான்.
 
வேல் செயும் போரினால் வெலப்படான்; தனைச்
சால் செயும் தவத்தினால் வென்ற தன்மையான்;
சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று, ஒளி
மேல் செயும் வானவர் விழைந்த பான்மையான்.

     அவன் வேல்கொண்டு செய்யும் போரினால் எவராலும் வெல்லப்
படாதவன்; மிகுதியாகச் செய்யும் தவத்தினால் தன்னையே வென்ற தன்மை
உடையவன்; மீன்களைக் கொண்ட கடலால் சூழப்பட்ட மண்ணுலகில்
தான் இருப்பினும், மேலே ஒளியைப் பொழியும் வானவரும் விரும்பத்தக்க
தன்மை உடையவன்.
  
                6
நீதிநன் முறையெலா நிறைந்த நீண்டவ
மாதிதன் மறையிவை யனைத்து மேற்படர்
கோதினன் றுதவிசெய் கொழுகொம் பாகிவா
னேதினன் முறையிவ ணிசைந்த மாட்சியான்.