நீதி நல் முறை
எலாம் நிறைந்த நீண் தவம்,
ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர்
கோது இல் நன் உதவி செய் கொழு கொம்பு ஆகி,
வான்
ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான். |
நல்ல நீதி
முறையெல்லாம் தன்னுள் நிறைந்த நீண்ட தவமும்,
ஆதிக் கடவுளின் வேதமும் ஆகிய இவை அனைத்தும் மேலே
படர்வதற்குக் குற்றமில்லாத நல்ல உதவியைச் செய்யும் கொழு
கொம்புதானே ஆகி, வானகத்திற்கு உரிய குறையற்ற நன்முறைகளெல்லாம்
இவ்வுலகில் அடைந்து கொண்ட மாட்சிமை உடையவன்.
நீளம், நன்மை என்ற சொற்களின் பண்படியை, நீள், நல் என்று
கொள்வதோடு, நீண், நன் என்று ஆளுதலும் முனிவர் வழக்கம்.
7 |
கோனலங்
கோடிலா நிறுவிக் கூர்த்தலா
னூனலம் பொருணல மறத்தி னுண்ணலந்
தேனல மினிதினிற் றிளைந்து நாடெலா
மீனலம் பயின்றவான் வியப்ப வாழ்ந்ததே. |
|
கோல்
நலம் கோடு இலா நிறுவிக் கூர்த்தலால்,
நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம்
தேன் நலம் இனிதினில் திளைந்து, நாடு எலாம்
மீன் நலம் பயின்ற வான் வியப்ப வாழ்ந்ததே. |
செங்கோலின்
நலம் வழுவாத முறையில் நிறுவிச் சிறத்தலால்,
நூலால் ஆகும் கல்வி நலமும் செல்வத்தின் நலமும் அறத்தின்
நுண்மையான நலமும் தேன் போன்ற இன்ப நலமும் இனிது நிறைந்து,
விண்மீன்களின் நலம் நிறைந்த வானுலகமும் வியக்குமாறு நாடெல்லாம்
வாழ்ந்தது.
8
|
பகைசெய்வார்க்
கிடியெனப் படிந்து போற்றிய
தகைசெய்வார்க் கமுதென நாமத் தன்மையா
னகைசெய்வார்க் கிளவலாய் நடத்தும் வேலிலான்
மிகைசெய்வா னாண்மையை விளம்பனன்றரோ. |
|