பகை செய்வார்க்கு
இடி என, படிந்து போற்றிய
தகை செய்வார்க்கு அமுது என நாமத் தன்மையான்,
நகை செய்வார்க்கு, இளவலாய், நடத்தும் வேல் இலான்,
மிகை செய்வான்; ஆண்மையை விளம்பல நன்று அரோ |
தன்னோடு பகை
கொள்பவருக்கு இடி போலவும், தன் கால்களில்
விழுந்து துதித்து மேன்மை செய்பவருக்கு அமுது போலவும் அச்சந்தரும்
தன்மை உடையவன் அத்தாவிதன் அவன் சிறுவனாய் இருந்த காலத்தில்
தன்னை இகழ முற்படுவார்க்குத் தன் கையில் போர் நடத்துவதற்கு உரிய
வேலும் இல்லாதவனாய்த் துன்பம் செய்தவன்; இத்தகையவனின் வீரத்தை
எடுத்துக் கூறுதல் நன்றாம்.
'அரோ'
அசை நிலை. இவ்வீர நிகழ்ச்சி : ப. ஏ. 1 சாமுவேல், 17 :
1 - 51 காண்க.
கோலியாற்றின்
அறைகூவல்
- மா, கூவிளம், - விளம், - விளம், - மா
9
|
மறைவ
ழங்கிய வளங்கொணாட் டிடைசவூ லாண்ட
முறைவ ழங்கிய கால்மறை பகைத்தனர் முகினின்
நுறைவ ழங்கிய வொப்பெனச் சரமழை வழங்கிப்
பொறைவ ழங்கிய பிலித்தையர் போர்செய வெதிர்த்தார். |
|
மறை
வழங்கிய வளம் கொள் நாட்டு இடை சவூல் ஆண்ட
முறை வழங்கிய கால், மறை பகைத்தனர், முகில் நின்று
உறை வழங்கிய ஒப்பு எனச் சர மழை வழங்கி,
பொறை வழங்கிய பிலித்தையர், போர் செய எதிர்த்தார். |
மெய்
வேதம் வழங்கிய வளம் கொண்ட சூதேய நாட்டில் சவூல் என்ற
மன்னன் ஆண்ட முறை நடந்த போது, மலைகளில் சஞ்சரித்த பிலித்தையர்
அவ்வேதத்தைப் பகைத்தவராய், மேகம் நின்று மழை பொழிந்ததற்கு ஒப்பாக
அம்பு மழை பொழிந்து, போர் செய்யுமாறு எதிர்த்து வந்தனர்.
இதற்கு முன்னெல்லாம் ஆண்டவனே யன்றி அரசன் வேறு
இல்லாதிருந்த இசுரவேலருக்குச் சவூல் காலந்தொட்டே அரசன் ஆண்டமுறை
தொடங்கியதென்பது அறிக (1 சாமுவேல், 10 : 17 - 24)
|