பக்கம் எண் :

முதற் காண்டம்109

     இரு மலைகள் சுமந்த ஒரு பெரு மலை இரு புயங்களுக்கு மேல்
அமைந்த ஒரு தலைக்கு உவமை.
  
                     12
நீண்ட வாள்புடை நெருங்கியே படர்கரு முகிற்போன்
மாண்ட தோள்வியன் வட்டமே பொறுத்துவெஞ் சுடரைத்
தூண்ட லாமெனச் சுளித்தநீ ளீட்டிகை தாங்கிக்
கீண்ட ளாவழல் வழிவழி கிளர்ப்பவிட் டெதிர்ந்தான்.
 
நீண்ட வாள் புடை நெருங்கியே, படர் கரு முகில் போல்,
மாண்ட தோள் வியன் வட்டமே பொறுத்து, வெஞ் சுடரைத்
தூண்டல் ஆம் எனச் சுளித்த நீள் ஈட்டி கை தாங்கி,
கீண்டு அளாவு அழல் விழிவழி கிளர்ப்ப விட்டு எதிர்ந்தான்.

     நெடிய வாளை இடையின் ஒரு பக்கம் நெருங்கத் தொங்கவிட்டு,
மாண்புள்ள தோள்மிது படர்ந்த கருமேகம் போல் பரந்த கேடயத்தைத்
தாங்கி, கதிரவனைத் தூண்டவும் இயலும் என்றவாறு சினந்து நீண்ட
ஈட்டியைக் கையில் தாங்கி, கிழித்துக் கொண்டு பரவும் நெருப்பைக்
கண்கள் வழியே கிளர்ந்து எழவிட்டு அவன் போரை எதிர் கொண்டான்.

     'சுளித்த ஈட்டி' என்ற விடத்து, உடையான் சினம் உடைமையின்
மேல் ஏற்றப்பட்டது. கீண்டு - 'கீன்று' என்ற சொல்லின் மரூஉ. ''கீண்டு
கொண்டெழுந்து ஏகினன் கீழ்மையான்'' என்ற கம்பர் வாக்கும் காண்க.
(சூளாமணிப் படலம் 20)
   
                    13
பெருக்கு வீங்கிய பெரும்புன லலைசுருட் டன்ன
வெருக்கு வீங்கிய விழிவுரு நெஞ்சிடை யடங்காச்
செருக்கு வீங்கிய விராக்கத னெரியெழச் சினந்து
தருக்கு வீங்கிய சலவுரை யிடியென விடிப்பான்.
 
பெருக்கு வீங்கிய பெரும் புனல் அலை சுருட்டு அன்ன,
எருக்கு வீங்கிய இழிவு உகு நெஞ்சு இடை அடங்காச்
செருக்கு வீங்கிய இராக்கதன் எரி எழச் சினந்து,
தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான்.

     வெள்ளப் பெருக்கால் பொங்கிய பெரிய ஆற்றில் எழும் அலையின்
சுழற்சி போல, எருக்கம் பூ மாலை திரண்ட இகழ்ச்சியே செரியும் நெஞ்சில்