அடங்காத அகந்தை
பெருகிய அரக்கன் தீப்பொறி பறக்கச் சினந்து,
ஆங்காரம் பொங்கிய கோப மொழிகளை இடிபோல் முழங்கி இடித்துக்
காட்டிச் சொல்வான்.
வெள்ளப் பெருக்கு செருக்காகவும், நெஞ்சு ஆறாகவும், எருக்கம்
பூ மாலை அலை சுருட்டாகவும் கொள்க. செருக்கு மனத்திலும் தருக்கு
வாயிலும் பிறக்கும் அகந்தையாக இவ்விடத்துக் கொள்க.
14 |
கூர்த்த
போர்செயக் கூடினர்க் கொருவன்வந் தெய்திச்
சீர்த்த நானவன் சிறந்தபோர் தனித்தனித் தாக்கத்
தோர்த்த பாங்கினர் தொழும்பரென் றாகுவ ரென்னா
வார்த்த வோகையா னகைத்திகழ் வறைந்தறைந் தழைப்பான். |
|
''கூர்த்த போர்
செயக் கூடினர்க்கு ஒருவன் வந்து எய்தி,
சீர்த்த நான் அவன் சிறந்த போர் தனித் தனித் தாக்க,
தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர்,'' என்னா,
ஆர்த்த ஓகையான் நகைத்து, இகழ்வு அறைந்து அறைந்து
அழைப்பான்.
|
''சிறந்த
போரைச் செய்யவென்று கூடிய நமக்குள் பக்கத்திற்கு ஒருவன்
இங்கு வந்தடைய, சிறப்புள்ள நானும் அவனும் சிறந்த போரைப் பக்கத்திற்கு
ஒருவனாகத் தனித்தனி நின்று தாக்க, எம்முள் தோற்றவன் பக்கத்தார்
வென்றவன் பக்கத்தார்க்கு அடிமைகள் என்று ஆகக்கடவர்,'' என்று,
ஆரவார மகிழ்ச்சியால் நகைத்து, இகழ்ச்சி சொல்லிச் சொல்லி அறைகூவி
அழைப்பான்.
தோர்த்த
- 'தோற்ற' என்ற சொல்லின் மற்றொரு வடிவம்.
'சோகுதோர்வைப் படலம்' எனப் பின் வருவதும் காண்க.
15 |
பெரிய
குன்றமோ பேயதோ பூதமோ வேதோ
வுரிய தொன்றிலா வுருவினைக் கண்டுளி வெருவிக்
கரிய விண்ணிடி கதத்தமின் கொடுவிடுத் தன்ன
வரிய கோலியாற் றறைந்தசொற் கேட்டனர் மருண்டார். |
|
பெரிய
குன்றமோ? பேய் அதோ? பூதமோ? ஏதோ?
உரியது ஒன்று இலா உருவினைக் கண்டு உளி வெருவி,
கரிய விண் இடி கதத்த மின் கொடு விடுத்து அன்ன
அரிய கோலியாற்று அறைந்த சொல் கேட்டனர் மருண்டார். |
|