அவ்வுருவம்
ஒரு பெரிய மலையோ? பேய் எனப்படும் அது தானோ?
பூதமோ? வேறு யாதோ? இவ்வாறு, இது என்பதற்கு உரியது ஒன்றும்
இல்லாத அவ்வுருவத்தை இசுரவேலர் கண்ட போது அஞ்சினர்; கரிய
மேகம் ஒன்று சினமுள்ள மின்னலோடு இடியை விடுத்ததுபோல, ஒப்பிடற்கு
அரிய கோலியாற்று அறைகூவிய சொல்லைக் கேட்டபோது மயங்கினர்.
கரிய மேகம்
கோலியாற்றுக்கும் இடி சொல்லுக்கும் மின் பல்லுக்கும்
உவமை.
16
|
நன்னெ
டும்படை நடுக்குறீஇ வெருவிய தன்மை
கன்னெ டுங்குவ டொத்தனன் செருக்கெழக் கடுத்துப்
பன்னெ டும்பகல் பரமனைப் பகைப்பவு மிகழ்ந்த
சொன்னெ னெடும்பகை தொடர்ந்தன னெவரையு
நகைப்பான் |
|
நல்
நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை
நல் நெடுங் குவடு ஒத்தனன் செருக்கு எழுக் கடுத்து,
பல் நெடும் பகல் பரமனைப் பகைப்பவும், இகழ்ந்த
சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான். |
நல்ல நெடிய
இசுரவேலர் படை நடுக்கங் கொண்டு அஞ்சிய
தன்மையால், மலையின் நெடிய சிகரம் போன்ற அவன் தன் செருக்கு
மேலும் வளரக் சினந்து, நீண்ட பல நாட்களாக அவர் தொழும்
ஆண்டவனைப் பகைப்பான்; இகழ்ந்த சொல்லால் நெடும்பகை
தொடர்ந்தான்; எவரையுமே நகைப்பான்.
17
|
தாங்கு
வாரிலா சாற்றிய வுரைகள்கேட் டெவரு
நீங்கு வாரென நிருபனு மயருதன் னெஞ்சிற்
கேங்கு வானெவ னெதிர்ந்தவவ் வரக்கனை வென்றா
லாங்கு நானவற் கென்மக லளளிக்குவே னென்பான். |
|
தாங்குவார்
இலா, சாற்றிய உரைகள் கேட்டு எவரும்
நீங்குவார் என, நிருபனும் அயரு தன் நெஞ்சிற்கு
ஏங்குவான்: ''எவன் எதிர்ந்த அவ் அரக்கனை வென்றால்,
ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன்'' என்பான். |
|