அவனைத் தடுப்பவர்
எவருமே இல்லாமல், அவன் சொல்லிய வீர
உரைகளைக் கேட்டு எவருமே நீங்கி விடுவாரென்று கண்டு, மன்னனும்
அயர்ந்து தன் நெஞ்சத்தில் ஏக்கம் கொள்வான் : ''எவனேனும்
எதிர்கொண்டு வந்த அவ்வரக்கனை வெல்வானாயின், அப்பொழுதே
நான் அவனுக்கு என் மகளை மணமுடித்துக் கொடுப்பேன்'' என்பான்.
நெஞ்சிற்கு
ஏங்குவான் - ஏழாம் வேற்றுமை நான்காம்
வேற்றுமையாக வந்த உருபு மயக்கம்.
தாவிதன் வீரவுரை
18
|
இன்ன
வாய்ப்பக னாற்பது மிரிந்தபின் னண்ணர்
முன்னர் மூவரே முரண்செயப் போயின ரவரைத்
துன்ன வாசையாற் றொடர்ந்திள தாவித னெய்தி
யன்ன யாவையு மஞ்சின ரறைதலுங் கேட்டான். |
|
இன்னவாய்ப்
பகல் நாற்பதும் இரிந்த பின், அண்ணர்
முன்னர் மூவரே முரண்செயப்போயினர், அவரைத்
துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி,
அன்ன யாவையும் அஞ்சினர் அறைதலும் கேட்டான். |
இவ்வாறாக
நாற்பது நாட்களும் கடந்து சென்றபின், இளமை வாய்ந்த
தாவிதன், முன்னர்த் தன் தமையன்மார் மூவர் போர் செய்யப்
போயிருந்தமையால், அவர்களை அணுகிக்காண ஆசையால் தொடர்ந்து
அங்கு வந்து சேர்ந்து, அங்கு நடந்த யாவற்றையும் அவர்கள் அச்சத்தோடு
சொல்லவும் கேட்டான்.
அஞ்சினர்
- அஞ்சி : முற்றெச்சம்.
19 |
கேட்ட
வாசகங் கிளர்திற நெஞ்சிடத் தெரியை
யீட்ட லாமென வெழுந்துள நினைந்தவை யாக்கிக்
காட்ட வாய்மையிற் கடந்தவல் கடவுளை நகைப்ப
வேட்ட லால்விளி விழுங்கிய கயவனா ரென்றான். |
|
கேட்ட
வாசகம் கிளர் திற நெஞ்சு இடத்து எரியை
ஈட்டல் ஆம் என எழுந்து, ''உளம் நினைந்தவை ஆக்கிக்
காட்ட, வாய்மையின் கடந்த, வல் கடவுளை நகைப்ப
வேட்ட லால், விளி விழுங்கிய கயவன் ஆர்?'' என்றான். |
|