கேட்ட
அவ்வார்த்தை கிளர்ந்தெழும் ஊக்கங்கொண்ட தன் நெஞ்சில்
நெருப்பைக் குவித்ததுபோல் ஆகுமென்று தாவிதன் கொதித்து எழுந்து,
''சொல்லுக்கு அடங்காத தன்மையுடைய தன் உள்ளம் நினைந்தவற்றை
அவ்வாறே ஆக்கிக்காட்ட வல்ல கடவுளை இகழ்ந்து பேச விரும்பியதன்
மூலம், சாவையே விழுங்கிய அத்தீயவன் யார்?'' என்றான். விளி - விளிவு :
சாவு.
20 |
கைவ
யத்தினாற் கருத்திடத் துடலினூங் கோங்கும்
பொய்வ யத்தினான் புகைந்தசொற் கஞ்சுவ தென்னோ
மெய்வ யத்தினால் விழைசெய மாவதோ கடவுள்
செய்வ யத்தினாற் சிறுவனான் வெல்லுவே னென்றான். |
|
''கை
வயத்தினால், கருத்து இடத்து உடலின் ஊங்கு ஓங்கும்
பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ?
மெய் வயத்தினால் விழை செயம் ஆவதோ? கடவுள்
செய் வயத்தினால், சிறுவன் நான் வெல்லுவேன்'' என்றான். |
''கையின்
வலிமையினால், உடல் வலிமையினும் மேலாக உள்ளத்தில்
ஓங்கி எழும் பொய்யான வலிமையைக் கொண்டுள்ள ஒருவன் சினத்தினால்
புகைந்து பேசிய சொல்லுக்கு அஞ்சுவது ஏனோ? உடலின் வலிமையினால்
மட்டும் ஒருவனுக்கு விரும்பிய வெற்றி கிட்டுவதோ? கடவுள் தரும்
வலிமையினால் சிறுவனாகிய நானுமே அவனை வெல்லுவேன்'' என்றான்.
21
|
என்ற
தண்ணல்கேட் டிவன்றனைக் கொணர்மினென் றிசைப்பச்
சென்ற வன்னநற் சேடனை நோக்கலு நீயோ
பொன்ற வுன்னினாய் பொருப்பினைப் பெயர்த்தெறிந் துவமை
வென்ற திண்மையான் வெகுளிமுன் னீயெவ னென்றான். |
|
என்றது அண்ணல்
கேட்டு, ''இவன்தனைக் கொணர்மின்'' என்று
இசைப்ப,
சென்ற அன்ன நல் சேடனை நோக்கலும், ''நீயோ
போன்ற உன்னினாய்? பொருப்பினைப் பெயர்த்து எறிந்து,
உவமை
வென்ற திண்மையான் வெகுளி முன் நீ எவன்!'' என்றான். |
|