25
|
தெரிந்த
வாய்ந்தவைஞ் சிலையொடு கவணெடுத் தெவரு
மிரிந்த பாலனை நோக்கியுள் ளதிசயித் திரங்க
விரிந்த வாசையால் வேதிய ராசியைக் கூறப்
பிரிந்த காலொலி வெருகவாங் கனைவரு மார்த்தார். |
|
தெரிந்த
வாய்ந்த ஐஞ் சிலையொடு கவண் எடுத்து, எவரும்
இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க,
விரிந்த ஆசையால் வேதியர் ஆசியைக் கூற,
பிரிந்த கால் ஒலி பெருக ஆங்கு அனைவரும் ஆர்த்தார். |
தானே தெரிந்தெடுத்த
வாய்ப்பான ஐந்து கற்களோடு கவணையும்
கையில் எடுத்துக் கொண்டு சென்றான். அங்கிருந்து நீங்கிய சிறுவனை
நோக்கி யாவரும் மனத்துள் வியந்து இரங்கினர்; குருக்கள் வெற்றி பற்றிய
விரிந்த ஆசையால் ஆசி மொழிகளைக் கூறினர்; தன் பக்கத்துப்
படையணியை விட்டுத் தாவிதன் தனியே பிரிந்து சென்ற போது அங்கு
இசுரவேலர் அனைவரும் ஒலி பெருக ஆரவாரம் செய்தனர்.
கல் - கூழாங்கல்,
கவண் - கல் எறி கயிறு. சிறுவனின் வீரம் பற்றி
வியப்பும், கொண்ட பகைவனின் பெருமை கருதிச் சிறுவன் பால் இரக்கமும்
பிறந்தன.
கோலியாற்று வீழ்ச்சி
26
|
ஆர்த்த
வோதைகேட் டரக்கனின் றமர்க்கெதிர் வருகப்
பார்த்த பாலனைப் பழித்தெழுந் தியாவரு மஞ்சக்
கூர்த்த வேலொடு குறுகவந் தகல்கரு முகிலிற்
பேர்த்த கோடைநாட் பேரிடி யெனவுரை செய்தான். |
|
ஆர்த்த ஓதை
கேட்டு, அரக்கன், இன்று அமர்க்கு எதிர்
வருகப்
பார்த்த பாலனைப் பழித்து எழுந்து, யாவரும் அஞ்சக்
கூர்த்த வேலொடு குறுக வந்து, அகல் கரு முகிலின்
பேர்த்த கோடை நாள் பேர் இடி என உரை செய்தான்: |
|