அருள் வளம் கொண்டு,
இவளோடு தனக்குள்ள நட்புறவைக் காட்ட எல்லை
இல்லாத வரங்களையும் இவளுக்குத் தந்தாள்.
''விண்ணகத்தில்
அரியதோர் அறிகுறி தோன்றியது. பெண் ஒருத்தி
காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின்
மேல் நின்றுகொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை
முடியாகச்சூடியிருந்தாள்,'' என்று திருவெளிப்பாடு (12 : 1) கன்னி
மரியாளைக் குறிப்பதனை இப்பாடல் பன்னிரண்டடிகளோடு ஒப்பு நோக்குக.
கொடு 'கொண்டு'
என்பதன் இடைக்குறை.
11
|
இன்னவை
மகளுந் தாயு மிணையென நடத்தும் வேளை
பன்னவை யறுந்தன் பூமான் பழங்கதை யுரைத்து ரைத்த
வன்னவை யெவருங் கேட்ப வவை வரை கென்றா டாயுஞ்
சொன்னவை மகளு மன்ன துணி வொடு வரைந்திட்டாளே. |
|
இன்னவை மகளும்
தாயும் இணை என நடத்தும் வேளை,
பல் நவை அறும் தன் பூமான் பழங்கதை உரைத்து, ''உரைத்த
அன்னவை எவரும் கேட்ப அவை வரைக,'' என்றாள் தாயும்.
சொன்னவை மகளும் அன்ன துணிவொடு வரைந் திட்டாளே |
மகளாகிய ஆகிர்த
மரியாளும் தாயாகிய கன்னி மரியாளும் இணைந்த
தன்மையாய் இவற்றை நடத்தி வந்த வேளையில், பல வகைக் குற்றங்களில்
எதுவும் அற்ற தன் கணவனின் பழமையான கதையைத் தாயாகிய மரியாள்
இவளுக்கு எடுத்துரைத்தாள் ''நான் உரைத்த அவற்றை எல்லோரும்
கேட்டுப் பயனடையுமாறு எழுதி வைப்பாயாக'', என்றும் சொன்னாள்.
மகளும் அத்தாய் சொன்னவற்றை அத்தகைய துணிவோடு எழுதி வைத்தாள்.
'அன்னவை' என்ற
பின், மீண்டும் 'அவை' பொருளுக்கு வேண்டாது
நின்றது.
வரை
கென்றாள் - வரைக + என்றாள் = ''வரைக வென்றாள்'' என
வரவேண்டியது தொகுத்தல் விகாரம் கொண்டது. |