அங்கு நின்ற
இசுரவேலர், பிலித்தையர் அனைவரும் கண்டு, கூசவும்,
பகைவர்தம் பெருமை கொண்ட நெடும் படை மயங்கி நொந்து மனம்
முறித்து ஓடவும், அவ்வரக்கனின் குழைந்த வாயில் வளைந்த நெடும்பிறை
போன்ற பற்கள் வரிசை வரிசையாகத் தோன்றவும், ஊனினின்று நெடிய
திரை போல் குருதி ஒழுகவும், கரிய நெடிய மலை போன்ற தலையைத்
தாவிதன் தூக்கிக் காட்டினான்.
பிறை, திரை
என்ற உருவகங்களால், பல், குருதி என்ற பொருள்கள்
வருவித்து உரைக்கப்பட்டன. நீல் - இங்குக் கருமை குறித்தது.
தாவிதன்
பெற்ற வாக்குறுதி
-விளம்,
-மா, தேமா, -விளம், -மா, தேமா
32
|
கார்முகத்
தசனி கூசக் கடுத்தவவ் வரக்கன் வென்ற
சீர்முகத் திளவல் பின்னர் திறத்ததன் னாம வேலாற்
போர்முகத் தெதிரொன் றில்லான் பொழிமறை பழித்த யாரும்
பார்முகத் ததற்கெஞ் ஞான்றும் பரிந்திட வகைசெய் தானே |
|
கார்
முகத்து அசனி கூசக் கடுத்த அவ் அரக்கன் வென்ற
சீர் முகத்து இளவல், பின்னர் திறத்த தன் நாம வேலால்
போர் முகத்து எதிர் ஒன்று இல்லான், பொழி மறை பழித்த யாரும்
பார் முகத்து அதற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தானே |
கருமேகத்தில்
தோன்றும் இடியும் கூசுமாறு சினந்து வந்த
அவ்வரக்கனைக் கொன்று வென்ற சிறப்பைக் கொண்டுள்ள அச் சிறுவன்,
பிற்காலத்தில் திறம் படைத்த, அச்சம் தரும் தன் வேலால் போர்க் களத்தில்
தனக்கு நிகர் ஒன்றும் இல்லாதவனாய் விளங்கி, நலமெல்லாம் பொழியும்
திருமறையை முன் பழித்த யாவரும் உலகத்தில் அதற்கு எந்நாளும் அன்பு
செலுத்த வகை செய்தான்.
|