பக்கம் எண் :

முதற் காண்டம்122

     'ஆல்' அசை நிலை, வரும் பொருள் காட்டும் தெய்வக் காட்சி
அறிவும், மிக்க தவமும் குடிகள் போல அவனிடம் தங்கின என்க.
   
                       35
சூழ்ந்தபொன் முடியுங் கோலுந் துறந்துபோ யரிய கானில்
வாழ்ந்தவொண் டவஞ்செய் மன்னர் வழங்கினு மதனைக்
                                          கூட்டி
யாழ்ந்தபன் மணியின் வீங்கு மாசனத் திருக்கச் சேர்த்தல்
தாழ்ந்தபண் பொழிந்த வின்ன தருமகோ னரிதிற் செய்தான்.
 
சூழ்ந்த பொன் முடியும் கோலும் துறந்து போய் அரிய கானில்
வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர் வழங்கினும், அதனைக் கூட்டி
ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்கக் சேர்த்தல்
தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன தரும கோன் அரிதின் செய்தான்.

     சூடிய பொன் முடியும் செங்கோலும் துறந்து. அரிய காட்டில் போல்
வாழ்ந்து சிறந்த தவம் செய்த மன்னரும் இருந்தனர். ஆயினும், பதிந்த பல
மணிகள் செறியும் அரியணையில் இருக்குமாறு அத்தத்துவத்தைக் கூட்டிச்
சேர்த்தலைத் தாழ்ந்த குணங்களையெல்லாம் ஒழித்த இந்த நீதி மன்னன்
அரிய விதமாய்ச் செய்து காட்டினான்.

     காட்டில் செய்தற்குரிய தவத்தை வீட்டில் - அதுவும் அரியணையில் -
கூட்டிச் சேர்த்தல் 'அரிய செயல்' எனப்பட்டது.
 
                       36
வேலொடு மாற்றார் வெள்ளம் வென்றுவென் றடக்கித் தன்னை
நூலொடு வெல்ல வைந்து நுட்புல னடக்கிக் காத்துக்
கோலொடு வழாமை நீதிக் கொழுந்துசேர் கொழுகொம்பானான்
சூலொடு வழங்கு மாரித் துளி பளித் தருளுங் கையான்.
 
வேலொடு மாற்றார் வெள்ளம் வென்று வென்று அடக்கி, தன்னை
நூலொடு வெல்ல ஐந்து துன்புலன் அடக்கிக் காத்து,
கோலொடு வழாமை நீதிக் கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான்,
சூலொடு வழங்கும் மாரித் துளி பழித்து அருளும் கையான்.