நீர்க் கருவோடு
மேகம் வழங்கும் மழைத் துளியைப் பழித்த
தன்மையாய் இரவலர்க்கு அருளோடு கொடுக்கும் கையை உடையவனாகிய
தாவிதன், தனது வேலின் ஆற்றலால் பகைவர் வெள்ளத்தை வென்று
வென்று அடக்கி, நூலறிவோடு பொருந்தத் தன்னை வெல்லுமாறு
நுண்ணிய ஐம்புலன்களையும் அடக்கிக் காத்து, செங்கோல் முறையினின்று
வழுவாமையால் நீதி என்னும் படர் கொடியின் கொழுந்து சேர்ந்து
தழைப்பதற்கான கொழுகொழும்பு போல் ஆனான்.
37 |
மன்னருந்
தயையாற் பாரில் வழங்கிய சீர்த்தி யல்லா
லின்னருங் குணங்க டம்மா லிறையவற் குகந்த கோமான்
முன்னருந் தவத்தோர் கொண்ட முறைதவிர் வரங்க ளெய்தித்
துன்னரு முயர்வீடுள்ளோர் துணையெனப் புவியில் வாழ்ந்தான். |
|
மன் அருந் தயையால்
பாரில் வழங்கிய சீர்த்தி அல்லால்,
இன் அருங் குணங்கள் தம்மால் இறையவற்கு உகந்த கோமான்,
முன் அருந் தவத்தோர் கொண்ட முறைதவிர் வரங்கள் எய்தி,
துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை எனப் புவியில் வாழ்ந்தான். |
இனிய அரிய
குணங்களின் சிறப்பால் ஆண்டவனுக்கு உகந்த
மன்னனாகிய தாவிதன், நிலைபெற்ற அரிய இரக்கத்தால் மண்ணுலகில்
அடைந்துள்ள புகழும் அல்லாமல், முற்காலத்து வாழ்ந்த அரிய
தவமுடையோர் கொண்ட அளவு முறைக்கு அடங்காத வரங்களும்
அடைந்து, அடைவதற்கு அரிய உயர்ந்த மோட்ச வீட்டில்
உள்ளவர்களுக்கு நிகராகவும் இவ்வுலகில் வாழ்ந்தான்.
அறம் வளர்த்த
கோமானாதலின், அற வளர்ச்சியில் நாட்டமுள்ள
வானுலகத்தவர்க்குத் துணை போல் ஆனான் என்று கொள்ளினும்
அமையும்.
38 |
ஆயினா
னடந்த தன்மை யாண்டகை யுவப்பி லோர்நாள்
வீயினா னிகர்த்த வெச்ச மிடைமுறை பலவும் போயோர்
சேயினா யைப்பச் செய்வேன் சிறந்தமூ வுலகி லன்னான்
வாயினா னவிலாக் கோன்மை வரம்பெற வளிப்பே
னென்றான். |
|